Tiruvannamalai

News July 17, 2024

எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் முகாம்

image

இன்று (17.07.2024) திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், இ.கா.ப. அவர்களின் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை காவல்துறையிடம் தெரிவித்தார்கள்.

News July 17, 2024

திருவண்ணாமலை:முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோயில் பாதுகாப்பு பணிகளில் முன்னாள் படை வீரர்களுக்கான 95 காலி பணியிடங்கள் காலியாக உள்ளது. கோயில் பாதுகாப்பு சிறப்பு காவலராக பணிபுரிய 62 வயதுக்குட்பட்ட நல்ல உடல் தகுதியும் விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள், மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News July 17, 2024

சாராய வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்

image

தி.மலை மாவட்டத்தில் சாராய ஒழிப்பை போலீசார் அனைத்துத்துறை அலுவலர்களை கொண்டு தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். சாராய விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 13 நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அந்த 13 நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News July 17, 2024

2,768 ஆசிரியர் பணி: வரும் 21ஆம் தேதி தேர்வு

image

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <>ஆன்லைனில் <<>>வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News July 17, 2024

பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனை

image

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலய தேரடி வீதி பெரிய தெருவில் அமைந்துள்ள பூத நாராயண பெருமாள் கோயிலில் இன்று ஆனி மாத ஏகாதசியை முன்னிட்டு பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News July 17, 2024

அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

image

இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் ஆடி முதல் நாளை முன்னிட்டு அண்ணாமலையார் பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து அதிகளவில் வந்துள்ளனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

News July 17, 2024

இலவச ஆன்மிக சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

image

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 17, 2024

தி.மலையில் சட்டவிரோத கட்டடங்கள்; கோர்ட் உத்தரவு

image

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ள மலையில், கிரிவல பாதையின் இருபுறமும் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றக் கோரி, வழக்குரைஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். திருவண்ணாமலை மலையில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை நேரில் ஆய்வு செய்து 4 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

News July 16, 2024

உதவித்தொகை வழங்காததை கண்டித்து போராட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை வழங்க விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்காததை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் முன்பு தங்கள் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News July 16, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று (16-07-2024) இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!