Tiruvannamalai

News July 5, 2024

திருவண்ணாமலையில் ஆலோசனைக் கூட்டம்

image

டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று திருவண்ணாமலை குறுமைய அளவிலான போட்டிகள் நடத்துவது குறித்து மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் கலந்து கலந்து கொண்டு போட்டிகளை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டது.

News July 4, 2024

சிறு தொழில்களுக்கான கடன் பெற ஆட்சியர் அழைப்பு

image

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் வகுப்பைச் சேர்ந்தோர் சிறு தொழில்கள் வியாபாரம் செய்ய தனிநபர் மற்றும் சுயஉதவிக் குழுக்களுடன் கடனுதவி பெற அதற்கான திட்ட அறிக்கை, சாதி, வருமானம், இருப்பிடம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற சான்றிதழ்களுடன் வங்கிகளில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தேர்வுசெய்து, தொகுப்பூதிய அடிப்படையில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டம் 2016 பிரிவு 19 இன்படி தற்காலிகமாக 59 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 8 கடைசி நாள். எனவே, விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பு

image

திருவண்ணாமலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் மழை அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், தமிழகத்தில் ஜூலை 9 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

News July 4, 2024

நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளியின் மாவட்ட குழு கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜூலை 3) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மேலாண்மை குழு மற்றும் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி மாவட்ட அளவிலான குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டமானது மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அளவிலான குழு கூட்டம் நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News July 3, 2024

எஸ்.பி தலைமையில் சிறப்பு முகாம்

image

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்  தலைமையில் பொதுமக்கள் குறைதீர் சிறப்பு மனு விசாரணை முகாம் திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இ‌ன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர். இதனை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். 

News July 3, 2024

மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு

image

உலக நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு
தினத்தை முன்னிட்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் திருவண்ணாமலை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு பள்ளி மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News July 3, 2024

திருவண்ணாமலை அரசு கல்லூரிகள் இன்று திறப்பு

image

திருவண்ணாமலை, அரசு கல்லூரியில் 2 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற்று முடிந்த நிலையில், மீதமுள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இன்று முதல் திறக்கப்படுகிறது. மேலும் அனைத்து வகுப்புகளும் நடைபெறும் என்று கல்லூரி முதல்வர் கணேசன் தெரிவித்தார்.

News July 3, 2024

திருவண்ணாமலை துணைத்தேர்வு பலர் ஆப்சென்ட்

image

தி.மலை மாவட்டம், கடந்த ஏப்ரல் மாதம் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத 10,11ஆம் மாணவர்களுக்கு, துணைத்தேர்வு பல்வேறு மையங்களில் நேற்று முதல் தொடங்கியது. இதில் 10 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் 645 பேரும், 11 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் 285 பேரும் நேற்று தேர்வு எழுத வரவில்லை. மேலும் தவறிய மாணவர்கள் தவறாமல் தேர்வு எழுதவேண்டுமென மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேச மூர்த்தி கேட்டுக்கொண்டார்.

News July 3, 2024

திருவண்ணாமலை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையால் நடத்தப்படும் இசைக்கல்லூரி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சாலையில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் குரலிசை, நாதஸ்வரம், தேவாரம், பரதநாட்டியம், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் மாதந்தோறும் ரூ.400 உதவித் தொகையுடன் 3 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் படிக்க விருப்பமுள்ளவர்கள் கல்லூரி முதல்வரை நேரில் அணுகலாம் என்று ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!