Tiruvannamalai

News August 13, 2024

நான்கு கிலோ கஞ்சா கடத்திய இளைஞர் கைது

image

ஆரணி அடுத்த பையூரைச் சேர்ந்த ராகுல் 26, ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்துவதாக நேற்று ஆரணி கிராமிய காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வேலூரில் இருந்து ஆரணி வந்த பேருந்தை சேவூர் ஆர்டிஓ அலுவலகம் முன்பு நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ஒரு லட்சம் மதிப்பிலான 4 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த ராகுலை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News August 13, 2024

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலாத் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது. ஆகவே தி.மலை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில்முனைவோரும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு www.tntourismawards.com என்ற இணையதளத்தில் ஆக 20க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

News August 13, 2024

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் முதியோர் உதவித் தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 573 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

News August 13, 2024

தி.மலை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

தி.மலை மாவட்டத்தில் வரும் 15.08.2024 ‘சுதந்திர தினம்’ அன்று 860 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. அனைத்து பொதுமக்களும் இக்கிராமசபை கூட்டங்களில் பங்குபெற்று கூட்டத்தில் வைக்கப்படும் பொருட்கள் குறித்து விவாதிக்கலாம் எனவும் கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து பொது மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News August 12, 2024

கிளாம்பாக்கத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகிறது. அதன்படி, கிளாம்பாக்கத்திலிருந்து தி.மலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, குமரி, தூத்துக்குடி, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 14 அன்று 470 பேருந்துகளும், ஆகஸ்ட் 16 மற்றும் 17 அன்று 365 பேருந்துகளும் இயக்கபடுகிறது.

News August 12, 2024

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

கலசப்பாக்கத்தில் உள்ள மிருகண்ட நதி அணையின் நீர்மட்டம் தற்பொழுது வினாடிக்கு 255 கன அடியாக உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீரை வெளியேற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக காந்தபாளையம், நல்லான் பிள்ளைபெற்றால், கங்காலமாதேவி, சிறுவள்ளூர், எலத்தூர், வில்வாரணி ஆகிய பகுதியில் ஆற்றங்கரை ஓரத்தில் வசித்து வரும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறும்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News August 12, 2024

சாத்தனூர் அணையின் நீர்மட்டம் கனிசமாக உயர்வு

image

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் செங்கம் அடுத்த சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சாத்தனூர் அணையின் கொள்ளளவு 119 அடியாகும். தற்போது சாத்தனூர் அணையின் நீர் இருப்பு 2083 கன அடியாகவும், 84 அடி உயரத்தை எட்டியுள்ளது. இதனால் சாத்தனூர் அணை தண்ணீரின் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News August 12, 2024

திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்பு

image

தி.மலை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று செய்யாறு, செங்கம், ஆரணி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தத்தால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இன்று மழை பெய்யுமா? பெய்யாதா?

News August 12, 2024

மாநகராட்சியாக இன்று உதயமாகும் திருவண்ணாமலை

image

தமிழகத்தில் புதிதாக மேலும் 4 மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு, அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திருவண்ணாமலை மாவட்டத்தை மாநகராட்சியாக சற்று முன் அறிவித்தார். மேலும், கடலூர் மாநகராட்சி ஆணையர் காந்திராஜன், திருவண்ணாமலை மாநகராட்சியின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் .

News August 12, 2024

தி.மலை இருந்து ஜோலார்பேட்டைக்கு ரயில் பாதை அமைக்க தீர்மானம்

image

திருவண்ணாமலையில் மேற்கு மாவட்ட தமாக செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மேற்கு மாவட்ட தலைவர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செங்கம் பகுதியில் நறுமணத் தொழிற்சாலை அமைக்க வேண்டும், திருவண்ணாமலையில் இருந்து செங்கம் வழியே ஜோலார்பேட்டைக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

error: Content is protected !!