India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்ட 50 ஓவர் கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. சங்கத் தலைவர் பிரவீன் ஸ்ரீதர் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் 32 அணிகள் பங்கேற்றன. முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மாலை 4 மணி வரை) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வெளியே செல்லும் பொதுமக்கள், குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யுமா?
திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரபல காமெடி நடிகர் கிங்காங்கின் தாயார் காசியம்மாள்(72) இன்று காலமானார். நள்ளிரவில் தாயாரிடம் ஆசீர்வாதம் பெற்ற நிலையில், சுமார் 12.30 மணி அளவில் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். கிங் காங், பலவேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். இவரது தாயாரின் மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தி.மலை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கிரிவல பாதையை ஆக்கிரமித்து கடை போடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதையை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வேண்டும் என்றும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ற அறிவுரைகளை ஆட்சியர் அதிகாரிகளுக்கு வழங்கினார்.
பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று முதல் ஆகஸ்ட் 20 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.கிளாம்பாக்கத்திலிருந்து நாளை 130 பேருந்துகளும், நாளை மறுநாள் 250 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. கோயம்பேட்டிலிருந்து நாளை 30 பேருந்துகளும், நாளை மறுநாள் 40 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. கிளம்பாக்கத்திலிருந்து 50 ஏசி பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை முதல் ஆகஸ்ட் 20 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.கிளாம்பாக்கத்திலிருந்து நாளை 130 பேருந்துகளும், நாளை மறுநாள் 250 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. கோயம்பேட்டிலிருந்து நாளை 30 பேருந்துகளும், நாளை மறுநாள் 40 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. கிளம்பாக்கத்திலிருந்து 50 ஏசி பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை சார்பில் திருவண்ணாமலையில் வரும் 23-ம் தேதி அன்று நடைபெறுகிறது. இந்த முகாம் ஆட்சியரக வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடைபெறுகிறது . இம்முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் பங்குபெறுகின்றன. இம்முகாமில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் பங்கு பெறலாம்.
திருவண்ணாமலையில் வரும் 19ஆம் தேதி ஆவணி பௌர்ணமி முன்னிட்டு, திருவண்ணாமலையில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருமலையில் கிரிவலம் செல்ல வசதியாக சேலம், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரியில் இருந்து வரும் 18 மற்றும் 19 ஆம் தேதி அன்று ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து வீதம் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஹெச்.சி.எல். நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பதிவு செய்ய https://www.hcltech.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வந்தவாசியை அடுத்த பழைய மும்முனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (29). அவரது மனைவி பத்மினி (25), மகள்கள் சுபாஷினி (5), மோகனாஸ்ரீ (4) மற்றும் பத்மினியின் தங்கை பானுமதி ஆகிய 5 பேரும் ஒரே பைக்கில் வந்தவாசி அருகே வெடால் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சென்றனர்.அப்போது வந்தவாசி அருகே சாலை தடுப்புக் கட்டை மீது பைக் மோதியதில் சிறுமி உள்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
Sorry, no posts matched your criteria.