India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.மலை கிரிவலத்திற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. விழுப்புரத்தில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் வந்தடைந்தனர். இதில், பயணிகள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டும், முண்டியடித்து கொண்டும் ரயிலில் ஏறினர். மேலும், ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
செய்யாறு தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற ‘செய்யாறு உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் பல்வேறு துறை சார்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு வழங்கினார். செய்யாறு எம்.எல்.ஏ ஜோதி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வருவாய் துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கிரிவலம் சென்ற பக்தர்கள் வீடு திரும்ப போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் திருவண்ணாமலை-வேலூர் திருக்கோவிலூர்-திண்டிவனம் ஆகிய சாலைகளில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, போலீசார் பக்தர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற செப் 20-ந் தேதி கலெக்டர் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொதுக் கோரிக்கைகளை கூட்டத்–தில் தெரிவித்தும், தனி நபர் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தும் பயன் பெறலாம். இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் புதன்கிழமை வரை பல லட்சம் பக்தர்கள் 14 கி.மீ. கிரிவலம் வந்தனர். அதிக பக்தர்கள் மற்றும் வெயிலின் காரணமாக நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டு, 5-6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட்டன.
தி.மலை மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் விவசாயம் மற்றும் தனிநபர் பணிகளான பண்ணைக் குட்டைகள், மண், கல் வரப்பு அமைத்தல், தோட்டக்கலை செடிகள் நாற்றங்கால் அமைப்பது ஆகிய பணிகளில் ஈடுபட விரும்பும் நபர்கள் தேவையான ஆவணங்களுடன் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அடையபுலம் கிராமத்தில் ஓடைதாங்கல் ஏரியில் உள்ளது. இந்த ஏரியில் இன்று 2 குடும்பங்களை சேர்ந்த மோகன்ராஜ் (13), வர்ஷா (9), கார்திகா (8) மற்றும் தானிஷ்கா (4) ஆகிய குழந்தைகள் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் இன்று புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்வதற்கும் அண்ணாமலையாரை தரிசிப்பதற்காக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இன்று அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர்
கைலாஷ்நாதன் சென்று சாமி தரிசனம் செய்தார்.
தி.மலையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் செப்டம்பர் 20 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு தீர்வு அளிக்கும் வகையில், வேளாண் துறை, கால்நடை, வங்கி மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர் . விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் இதில் பங்கேற்று பயனடையலாம் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
தி.மலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, பக்தர்கள் வசதிக்காக 2 சிறப்பு ரயில்களை தெற்கு இரயில்வே இயக்குகிறது. சிறப்பு இரயில்கள் விழுப்புரத்திலிருந்து இன்று காலை 9.15 மணிக்கும், இரவு 9.15 மணிக்கும் புறப்படும். அதேபோல், தி.மலையில் இருந்து நாளை பிற்பகல் 12.40 மணிக்கும், புதன்கிழமை (செப்.18) அதிகாலை 3.30 மணிக்கும் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.