India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மற்றும் சர்வே பிரிவில் கணக்கில் வராத ரூபாய் 56 ஆயிரத்து 130 ரூபாய் பணம் பறிமுதல் மற்றும் அரசு பணியாளர்களிடம் செல்போனை நேற்று பறிமுதல் செய்தனர். மேலும், 6 மாதத்தில் போன்பே, ஜிபே மூலம் ரூபாய் 25 லட்சத்து 35 ஆயிரத்து 824 ரூபாய் பண பரிமாற்றம் நடைபெற்றது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.நேற்றும் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை பேசுகையில், உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தரும், வெளி மாநில மற்றும் வெளி நாட்டு பக்தர்களின் வசதியை மேம்படுத்தும் பொருட்டு திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைத்து தர வலியுறுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்துவந்த கார்த்திகேயன் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக கே.பிரபாகரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அவர் இதற்கு முன்னர் கரூர் எஸ்பியாக இருந்தார். திருவண்ணாமலை எஸ்பியாக இருந்த கார்த்திகேயன் கோவை மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மிதமான மழையே பெய்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தின் 6 வட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே துரிஞ்சிக்குப்பம் குளக்கரையில் ஆதிபராசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடிபூரத்தையொட்டி நேற்று கொதிக்கும் எண்ணெய்யில் பக்தர்கள் வெறும் கையால் வடை எடுக்கும் வேண்டுதல் நடைபெற்றது. இவ்வாறு எடுக்கப்பட்ட வடைகளை குழந்தையில்லா தம்பதியினர் ஏலம் கேட்டனர். முதல் வடை ரூ.28,000-க்கும், 2-வது வடை ரூ.24,100-க்கும், 3-வது வடை ரூ.25,500-க்கும் ஏலம் போனது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் திருக்கோவிலில் புதன்கிழமை ஆடிப்பூரம் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு விழா முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அம்மனின் அலங்காரத்தை காண கோடி கண்கள் வேண்டும் என்பதை பக்தர்கள் உணர்ந்த தருணமாக இருந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
10ஆவது தேசிய கைத்தறி தின விழாவினை முன்னிட்டு தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (07.08.2024) ஒருநாள் சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சியை குத்துவிளக்கேற்றி முதல் விற்பனை துவக்கி வைத்து, நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில், அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌர்ணமியையொட்டி, கிரிவலம் செல்லும் நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆக.19 திங்கட்கிழமை அதிகாலை 2: 58 மணிக்கு முழுநிலவு ஆரம்பமாகி 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.02 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரங்களில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.