Tiruvannamalai

News March 22, 2024

81 பேர் மீது வழக்குப் பதிவு

image

தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் செய்யாறு தொகுதியில் திமுக மற்றும் அதிமுக கட்சியினா் தோ்தல் விதிகளை மீறி கூட்டம் கூடி பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தி.மு.க வினர் 41 பேர்.அ.தி.மு.க 40 என மொத்தம் 81 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News March 22, 2024

யானை வாகனத்தில் பெருமாள் பவனி

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில் நேற்று இரவு பங்குனி உத்திர விழாவின் ஆறாம் நாள் யானை வாகனத்தில் ரங்கநாத பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மேலும் வெண்பட்டு உடையில் இராஜ அலங்காரத்தில் அமர்ந்தவாறு மங்கல வாத்தியங்கள் முழங்க திருவீதியுலா வந்தார். பக்தர்கள் தீபாராதனை காட்டி தங்களது வேண்டுதலை வெளிப்படுத்தினர்.

News March 21, 2024

செங்கம் அருகே பக்தர்கள் தரிசனம்

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி கிராமத்தில் உள்ள அருள்மிகு பெரியநாயகி சமேத ஶ்ரீ கறைகண்டீஸ்வரர் திருக்கோவில் பங்குனி உத்திர பெருவிழா 2024 ஏழாம் நாள் உற்சவம் திருத்தேர் திருவிழா விமர்சியாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் மூர்த்திகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

News March 21, 2024

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

செய்யாறு வட்டம், பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரும் இவருடைய நண்பர் ராமு என்பவரும் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பல்லி கிராமம் அருகே எதிரே வந்த வாகனம் மோதியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், ரவி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். ராமு சிகிச்சை பெற்று வருகிறார்.

News March 21, 2024

தி.மலை மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி சார்பில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு இன்று (21.03.2024) 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர் பாண்டியன் அவர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News March 21, 2024

ஆரணி தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

2024 மக்களவைத் தேர்தல், ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணி வேந்தன் போட்டியிடவுள்ளார். கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸிலிருந்து விஷ்ணுபிரசாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை இத்தொகுதியில் திமுக-வே நேரடியாக களம் காண்கிறது. இதில் போட்டியிடும் தரணி வேந்தன், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி ஆகியவை இதன் சட்டமன்றத் தொகுதிகள்.

News March 21, 2024

மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி பரிசளிப்பு விழா

image

திருவண்ணாமலை SRGDS மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாவட்ட அளவிலான 14 வயதுக்குட்பட்ட இறகு பந்து போட்டி நடைபெற்றது . இதில் தனியார் மற்றும் அரசு பள்ளி சார்ந்த 20 அணிகள் பங்கு பெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடற்கல்வி ஆய்வாளர் சின்னப்பன் சான்று மற்றும் கோப்பை வழங்கி பாராட்டினார். பள்ளியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 21, 2024

2ம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

திருவண்ணாமலை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக கலியபெருமாள் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.

News March 21, 2024

தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி உங்கள் பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 21, 2024

தி.மலையில் தேர்தல்  விழிப்புணர்வு

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் வைக்கப்பட்டுள்ள மின்னனு திரை மூலம் மக்களவை தேர்தலுக்கான முறையான வாக்காளர் தேர்தல் பங்கேற்பு பற்றிய விழிப்புணர்வு விளம்பரத்தினை நேற்று (மார்ச்.20) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்