India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு துறை சார்பாக பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பண்டிகை கால உணவு தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்களுடன் மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். பௌர்ணமி கிரிவலத்துக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி பௌர்ணமி கிரிவலத்துக்கு பிறகு, அண்ணாமலையார் கோயிலில் உள்ள உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்நிலையில் ரூபாய் 2 கோடியே 71 லட்சத்து 28 ஆயிரத்து 86 ரூபாய் . தங்கம் 110 கிராம், வெள்ளி 1150 கி.கிராம் ஆகும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (24.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் திருவண்ணாமலை வருவாய் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டி நாளை (25-10-2024) திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் திருவண்ணாமலையை சார்ந்த 11 வட்டங்களில் இருந்து 900 மாணவிகள் பங்கு பெற உள்ளனர். முதல் 3 இடம் பிடிக்கும் மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக பெய்த மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 2430 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 119 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 108 அடி நீர் நிரம்பியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 8 அடி நீர் நிரம்பி உள்ளதாக மாவட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நாளை (24-10-2024) 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யுக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (23.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை விஜிலன்ஸ் டிஎஸ்பி வேல் முருகன் மற்றும் காவல் ஆய்வாளர் அருள் பிரசாத் தலைமையில் தண்டராம்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடைபெற்று வருகிறது. அலுவலகத்தில் ஆங்காங்கே இருந்த பணம் மற்றும் இடைத்தரகர்கள் ஆகியோரை விசாரணை செய்து, சார் பதிவாளர் கதிரேசன் மற்றும் அலுவலர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. உடன் விஜிலென்ஸ் உதவி ஆய்வாளர் கோபிநாத் மற்றும் போலீசார் உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பாக அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-ஆம் ஆண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று (23.10.2024) நடைபெற்றது. இதில், அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
2024 – 25ஆம் ஆண்டுக்கான பாரதியார் மற்றும் குடியரசு தின விழா போட்டிகளில் தி.மலை வருவாய் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் இறையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று திருச்சியில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கு பெறத் தகுதி பெற்றுள்ளனர். வருவாய் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசகிரிவாசன் பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.