India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை 27-10-2024, தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
திருவண்ணாமலையில் இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் திங்கள்கிழமை (அக். 28)வெண்பன்றி வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.மேலும், விவரங்களுக்கு 04175-298258,9551419375 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
திருவண்ணாமலை மாவட்டம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி குறை தீர்வு கூட்டம் வருகின்ற திங்கட்கிழமை 28-10-2024 செய்யாறு டிடிசிசி வங்கியில் காலை 9 மணி முதல் மாலை 5:45 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உறுப்பினராக உள்ள தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர், பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலுவின் நாளை மற்றும் நாளை மறுநாள் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இன்று திமுக மாவட்டச் செயற்குழு கூட்டம், 27ஆம் தேதி காலை ஒட்டல் திறப்பு விழா, உணவு திருவிழா, மாலை தண்டராம்பட்டில் நடைபெறும் கலை நிகழ்ச்சி கலந்து கொள்ளுதல், 28ஆம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம் ஆய்வு, செயற்குழு கூட்டம் கலந்து கொள்கிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை அதன் முழு கொள்ளளவான 119 அடியில் அணைக்கு தொடர்ந்து 6000 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் அணையில் தற்போது 113.50 அடி நீர் நிரம்பி உள்ளதால் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணையில் இருந்து பத்தாயிரம் கன அடி நீர் திறக்கப்பட உள்ளதால் இதனால் சாத்தனூர் அணை சுற்றியுள்ள 14 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நீர்வளத் துறை அதிகாரிகள் விடுத்துள்ளனர்
திருவண்ணாமலை அருகே பெரியகோளாப்பாடி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள 103 காலி மனைகள் ஒதுக்கீட்டுக்கு தயாராக உள்ளன. புதிய தொழில் தொடங்க விரும்புவோர் சிட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மனைகளை பார்வையிட அல்லது விவரங்களை பெற, திருவண்ணாமலை சிட்கோ கிளை அலுவலகம் அல்லது கிளை மேலாளர் இசக்கி ராஜனை 9445006558 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை மாவட்டங்கத்தில் பரவலாக பெய்த மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 6,450 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 119 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 113.40அடி நீர் நிரம்பியுள்ளது. விரைவில் அணை நிரம்பும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
திருவண்ணாமலையை அடுத்த. ரிங்ரோடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சந்தேகம் அடைந்தால், கார் நிறுத்தாமல் தப்ப முயன்றனர் குட்கா கடத்திய காரை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார், 2 கார்களுடன் 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஜெகதீஷ் என்பவரை கைது செய்தனர். இதில் முக்கிய சப்ளையர்களை தேடும் பணியில் போலீசார் உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருள்மிகு சென்னியம்மன் பாறை ஆலயத்திற்கு பக்தர்கள், பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆற்றில் இறங்கவும் குளிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகத்தின் சார்பில் பாதாகை வைத்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து இன்று (அக். 25) மதியம் 1. 00 மணிக்கு மேல் வினாடிக்கு 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக எச்சரிக்கை விட்டுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.