India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை நகர அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் இன்று வியாழன் கிழமை காலையில் புகழ்பெற்ற நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் காவல்துறை பாதுகாப்பு உடன் சாமி தரிசனம் செய்தார். கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று (மே.02) மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் ஆங்காங்கே வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்-உம் முதன்முதலாக விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய விடுமுறை நாளான மே.1 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கடைகள். உணவு, வணிக நிறுவனங்கள் விடுமுறை அளிக்காமல் பணிக்கு அமர்த்திய 91 நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதில் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 28 நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 40 என 68 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குட்கா பொருட்களை சப்ளை செய்து வந்த நபர்களை சினிமா பாணியில் போலீசார் நேற்று விரட்டிச் சென்று பிடித்தனர். இதில் இரண்டு லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள், ஆம்னி கார் மற்றும் இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் பரத்குமார்,சிவக்குமார் மற்றும் சுரேஷ்பாபு ஆகியோரை கைது செய்தனர்.
சென்னை கடற்கரை to திருவண்ணாமலை தினசரி ரயில் நாளை 02.05.2024 முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,
தற்போது செயல்பாட்டுக் காரணங்களால் மேலும் ஆலோசனை வரும் வரை இந்த அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் திரும்பப் பெறப்படுகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில்
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இந்நிலையில், இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 107. 6 டிகிரி பாரன்ஹீட், 42 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
கலசபாக்கம் அடுத்த முத்தரசம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது சகோதரர் ரமேஷ். இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை சுரேஷை வழிமறித்த ரமேஷ் அவரை சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மே 1) தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் (8 மணி வரை ) திருவண்ணாமலையில், இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதால், வெயிலின் தாக்கம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியும், வழுக்கலான ரோடுகளாகவும் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கம் அடுத்துள்ள சாத்தனூர் அணை சுற்றுலா இடத்திற்கு வழக்கமாக கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பார்வையாளர்கள் மற்றும் குழந்தைகள் வருவது வழக்கம். கோடை வெயிலின் உக்கிரம் உச்சத்தில் இருக்கும் நிலையில், சாத்தனூர் அணையில் மக்கள் நடமாட்டம் இன்றி பூங்காக்கள் களை இழந்து காணப்படுகிறது.
ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் இரும்பேடு பகுதியை சேர்ந்த அமீன் தாஸ் தகிர் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவம் பயிலாமல் லேப் டெக்னீசியன் முடித்து மருத்துவராக மருத்துவம் பார்த்து வந்த அமீன் தாஸ் தகீரை, மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் ஆரணி போலீசார் நேற்று(ஏப்.30) இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.