Tiruvannamalai

News October 29, 2024

திருவண்ணாமலையில் அதிரடி மாற்றம்

image

திருவண்ணாமலை வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வந்த கே. துரைராஜ் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு இன்று திருவண்ணாமலை வட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதேபோல் திருவண்ணாமலை வட்டாட்சியராக பணியாற்றி வந்த தியாகராஜன் அவர்கள் வட்ட வழங்கல் அலுவலராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News October 29, 2024

ஆரணியில் அரசு பேருந்து மோதி தொழிலாளி பலி

image

ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சேட்டு என்ற சுமை தூக்கும் தொழிலாளி இன்று காலை ஆரணி நகருக்கு சுமை தூக்கும் தொழிலுக்கு சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வேலூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற அரசு பேருந்து, சைக்கிள் மீது மோதி நிலை தடுமாறி அவர் கீழே விழுந்ததில் பின் சக்கரம் ஏறி உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்து ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News October 29, 2024

மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 577 பேர் மனு

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மனு அளிக்க மாவட்டத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். மொத்தம் 577 மனுக்கள் பெறப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 29, 2024

தி.மலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் ஒழிப்பு, கள்ளச்சாராயம், போலி மது விற்பனை தடைச் செய்தல், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான வாராந்திர ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News October 29, 2024

கனரா வங்கியை ஆரணி எம்பி திறந்து வைத்தார்

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரத்தில் புதியதாக துவங்கி உள்ள கனரா வங்கியை நேற்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M.S தரணிவேந்தன் MP அவர்கள் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து துவக்கி வைத்தார்.உடன் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் S.அம்பேத்குமார் வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News October 29, 2024

ஆரணி எம்பி திமுக அடையாள அட்டையை வழங்கினார்

image

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தொகுதி வெம்பாக்கம் ஒன்றியம் குத்தனூர் ஊராட்சியில் திமுக கொடி ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்து நிர்வாகிகளுக்கு திமுக கழக உறுப்பினர் அடையாள அட்டையை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M.S தரணிவேந்தன் MP வழங்கினார். உடன் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர்  ஜோதி தலைமை செயற்குழு உறுப்பினர் R.வேல்முருகன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதிசீனிவாசன் உள்பட பலர் இருந்தனர்.

News October 28, 2024

தி.மலை தீயணைப்பு அலுவலர் எச்சரிக்கை

image

தீபாவளி பண்டிகை 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி அன்று குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது இறுக்கமான பருத்தி ஆடையை அணிய வேண்டும். தளர்வான ஆடைகளை அணியக்கூடாது. பெரியவர்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகள் வெடிக்க வேண்டும். பட்டாசுகளை பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனை அருகில் வெடிக்க செய்தல் கூடாது. என்று திருவண்ணாமலை மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணன் தெரிவித்து உள்ளார்.

News October 27, 2024

14 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

சாத்தனூர் அணை நிரம்பி வருவதால் மதகுகளின் வழியே தண்ணீர் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொளமஞ்சனூர், திருவடத்தனூர், புதூர் செக்கடி, எடத்தனூர், ராயண்டபுரம், அகரம்பள்ளிப்பட்டு, உலகலாப்பாடி, வாழவச்சனூர் மற்றும் சதாகுப்பம் உள்ளிட்ட 14 கிராமங்கள் வழியாக வெள்ள நீர் செல்வதால் கரையோர மக்கள் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News October 27, 2024

824 பேர் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதவில்லை

image

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 652 பணிகளுக்கான தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நேற்று தமிழ்நாடு முழுவதும் தேர்வு நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1741 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 6 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 917 பேர் மட்டுமே தேர்வு எழுதி இருந்தனர். 824 பேர் தேர்வு எழுதவில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News October 27, 2024

தி.மலை கலைக்குழுவினர் துவக்கி வைப்பு

image

தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டின் துவக்க விழாவில் தி.மலை மாவட்ட கலைக்குழுவினர் கலந்து கொண்டு பறை இசை, மேளம், நடன கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி மாநாட்டை துவக்கி வைத்தனர். மேலும் மாநாட்டில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற பின்னர் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சிறப்புரை ஆற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.