India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத முதல் சோமவார தினமான நேற்று 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சாமி சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த பூஜையில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வந்தவாசி தாலுக்கா வங்காரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (55) கடந்த 2019 ஆம் ஆண்டு 8 வயது சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், திருவண்ணாமலை போக்சோ நீதிமன்ற நீதிபதி பார்த்தசாரதி நேற்று பெருமாளுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன் தலைமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 616 மனுக்கள் பெறப்பட்டது. பின்னர் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன் உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு கேரளா மாநிலத்தைச் சார்ந்த குருஜி ராமலிங்க சித்தாந்தி, சிவானந்தன் ஆகியோர் தீபாரதனை செய்யக்கூடிய ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளியால் ஆன 16 வகை பொருட்களை நன்கொடையாக கோவில் நிர்வாகத்திடம் நேற்று ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (18.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில், இன்று (18.11.2024) கார்த்திகை மாத முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு, திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தி.மலை எஸ்.கே.பி கல்வி குழுமம் நடத்தும் வாகை சூடவா 2.0 மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நவ.30 மற்றும் டிச.01 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் 3 முதல் 17 வயது வரையிலான மாணவ மாணவிகள் பங்கேற்கலாம். தனிநபர் போட்டியில் சிலம்பம், சதுரங்கம், ஸ்கேட்டிங், குழு போட்டியில், கேரம், வாலிபால், மட்டைப்பந்து, எறிப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெறள்ளது. மேலும் தகவலுக்கு 9442955580 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
திருவண்ணாமலையில் டிசம்பர் 21 ஆம் தேதி உழவர் பேரியக்க மாநில மாநாடு நடைபெறுகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். உழவர்களின் துயரங்களுக்கு தீர்வுகளைப் பெறுவதற்காக மாநில மாநாடு நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள உழவர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என ராமதாஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், செய்யாறு பகுதியில் 52 மி.மீ., மழை பதிவாகியுள்ளது, மற்ற பகுதிகளில் 27.6 முதல் 40 மி.மீ., வரை மழை பதிவாகி உள்ளது. மழை காரணமாக 87 ஏரிகள் 100% நிரம்பியுள்ளது. மேலும், 23 ஏரிகள் 75% நிரம்பியுள்ளது, 50% அல்லது அதற்கு மேல் நிரம்பி 99 ஏரிகள் உள்ளது. மேலும் 3 ஏரிகளில் நீர் இல்லாத நிலையில் காணப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், தூசி ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம் நடைபெறுவதை, திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் நேற்று (17.11.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், அரசுத் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.