India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூரில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரனை வதம் செய்யும், சூரசம்ஹாரம், முருகன் கோவில்களில் இன்று நடக்கிறது. கந்தசஷ்டி விழா கடந்த, 2ம் தேதி துவங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு அணிந்து, விரதத்தை துவக்கினர். கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு கந்த சஷ்டி விழா நடைபெற்றது. பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்ள உள்ளனர்.
➤திருப்பூரில் குட்கா விற்ற கடைக்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ➤திருப்பூரில் ரேஷன் கடையில் காலியாக உள்ள 135 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ➤திருப்பூரில் பூனைக்கா, மாட்டுக்கா என யாருக்கு முதலில் சிகிச்சை அளிப்பது என இரு தரப்பினர் மோதல். ➤அலகுமலை முத்துகுமாரசாமி பாலதண்டாயுதபாணி கோவிலில் சூரசம்ஹாரம் ஏற்பாடுகள் தீவிரம். ➤உடுமலையில் குரங்ககளை பிடிக்க வனத்துறை ஏற்பாடு.
திருச்சி ரயில் நிலையத்தில் பாலப்பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி பாலக்காடு டவுன் ரயில் திருச்சி பகுதியில் இருந்து மதியம் ஒரு மணிக்கு இந்த ரயில் இன்று புதன்கிழமை முதல் வரும் 21ஆம் தேதி வரை திருச்சி சந்திப்பிலிருந்து திருச்சி மலைக்கோட்டை ரயில் நிலையம் வரை இயக்கப்படாது என ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 135 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு நாளையே கடைசி நாள் ஆகும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே<
மத்திய அரசின் பாராளுமன்ற கனரக தொழில்துறை ஆலோசனை குழு உறுப்பினராக ஈரோடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளருமான கே.இ. பிரகாஷ் எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி, திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், முக்கிய நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
திருப்பூரில் உள்ள முருகன் கோவில்களில் கடந்த 2ஆம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. நாளைய தினம் மாலை சூரசம்ஹாரம் நடைபெற உள்ள நிலையில் திருப்பூர் அலகுமலையில் உள்ள முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோவில் கிரிவலப் பாதையில் சூரசம்ஹாரம் நடத்தும் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உர விற்பனை நிலையங்களிலும் வேளாண் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு தர பரிசோதனைக்காக உரம் மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி வருகின்றனர். உரவிற்பனையில் எந்தவித செயற்கை உரத்தட்டுப்பாடு ஏற்படாத வகையில் ஆய்வு நடைபெற்று வருகிறது. விதி மீறும் உர விற்பனையாளர்கள் மீது உரக்கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என இணை இயக்குநர் கிருஷ்ணவேணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் மலை ஏற்றத்திற்கு (டிரக்கிங்) தகுதியான 40 இடங்களை தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சின்னார் சோதனைச் சாவடி கோட்டார் பகுதியை மலை ஏற்றத்திற்கு தகுந்த இடமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பகுதியில் மக்கள் மலையேற்றம் செய்ய விரும்புவதோடு அங்கு வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்ந்துவதாகவும் அமையும். என்ன மக்கள் டிக்கிங்கிற்கு ரெடியா?
திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் நடந்த நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசும்போது, திருப்பூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 7,069 பேரும், தமிழ்புதல்வன் திட்டத்தில் 4,608 பேரும் பயனடைந்து வருகிறார்கள். இது போன்று ஏராளமானவர்கள் அரசு திட்டங்களில் பயன்பெற வேண்டும் என்றார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் போக்குவரத்து அலுவலர் நாகராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி கடந்த அக்டோபர் மாதம் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது போக்குவரத்து விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. போக்குவரத்து விதிகளை பின்பற்றி விபத்துகளை தவிர்க்க வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.