Tiruppur

News November 9, 2024

திருப்பூர்: ஏற்றுமதியாளர்களுடன் சந்திப்பு

image

ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய கம்பளி பஞ்சு உற்பத்தியாளர் ஆன மிக்செல் புல் நிறுவனத்தின் விற்பனை பிரிவு இயக்குநர் கைனர்ஸ் ஸ்காட் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்திற்கு வருகை தந்தார். இன்றைய ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடினார். கம்பளி பஞ்சின் விலையை கிட்டத்தட்ட 30 சதவீதம் குறைக்கும் வகையில் நிறுவனத்தின் கண்டுபிடிப்புகளை ஏற்றுமதியாளர்களுக்கு தெளிவுபடுத்தினர்.

News November 9, 2024

திருப்பூர் கலெக்டர் கடும் எச்சரிக்கை

image

திருப்பூர் மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதியின்றி அரசு பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களில் சட்ட விரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுப்பது மற்றும் வாகனங்களில் எடுத்துச் செல்வதும் கனிமம் மற்றும் சுரங்க சட்டப்படி குற்றமாகும். தாசில்தார் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட உள்ளனர். மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

News November 8, 2024

திருப்பூர் கனிம வளங்கள் கடத்தல்: கலெக்டர் எச்சரிக்கை

image

திருப்பூர் மாவட்டத்தில், அரசின் முறையான அனுமதியின்றி அரசு புறம்போக்கு, பட்டா நிலங்களில், சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பது; அனுமதியின்றி வாகனங்களில் எடுத்துச் செல்வது ஆகியவை கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சட்டவிரோதமாக கனிமங்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள் கைப்பற்றப்படும். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.

News November 8, 2024

திருப்பூரில் தொழில் திறன் வளர்ப்பு நிகழ்ச்சி

image

இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) திருப்பூர் மாவட்ட கவுன்சில் சார்பில், ‘புதிய பயணம்; வளர்ச்சியை நோக்கி’ என்கிற தலைப்பில், தொழில்முனைவோருக்கான திறன் வளர்ப்பு நிகழ்ச்சி துவக்க விழா, கிட்ஸ் கிளப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. புதிய தொழில்முனைவோரின் திறமைகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்சூழலை வளர்ப்பதன்மூலம், திருப்பூருக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது என கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசினார்.

News November 8, 2024

திருப்பூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

image

திருப்பூர் மாவட்ட கல்வித்துறை சார்பாக அனைத்து துவக்க, நடுநிலை மற்றும் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் நாளை (நவ.9) பள்ளிகள் முழு நேரம் செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு மறுநாள் நவ.1ம் தேதி பண்டிகைக்கு அடுத்த நாள் பொது விடுமுறையாக அரசு அறிவித்தது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாகவே நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 7, 2024

அலகுமலையில் சூரனை வதம் செய்த பாலதண்டாயுதபாணி

image

திருப்பூரில் உள்ள முருகன் கோவில்களில், கந்த சஷ்டி விழா கடந்த 2ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்வுடன் தொடங்கியது. இந்நிலையில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்வை முன்னிட்டு இன்று திருப்பூர் அழகுமலை உள்ள முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோவிலில் கிரிவலப் பாதையில், அரோகரா கோஷம் முழங்க பாலதண்டாயுதபாணி அன்னையிடம் பெற்று வந்த சக்திவேலால் சூரனை வதம் செய்தார்.

News November 7, 2024

திருப்பூரில் பூக்களின் விலை உயரும் அபாயம்

image

திருப்பூரில் தொடர் முகூர்த்தம், கந்த சஷ்டி விழா என தொடர்ந்து விசேஷங்கள் வருவதால் பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது. மேலும் பருவநிலை மாற்றத்தால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை, வெயில் மற்றும் இரவில் பனிப்பொழிவு என மாறி மாறி வருவதால் பூக்களின் விளைச்சல் குறைந்தது. கடந்த வாரம் ரூ.760-க்கு விற்ற மல்லிகை பூ வரும் வாரங்களில் விலை ஏறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் அச்சம் தெரிவித்தனர்.

News November 7, 2024

திருப்பூரை முன்னோடி மாவட்டமாக மாற்ற கலெக்டர் அறிவுரை!

image

திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. அரசின் வளர்ச்சி திட்டங்கள், அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதில், திருப்பூர் முன்னோடி மாவட்டமாக திகழ வேண்டும். திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.

News November 7, 2024

திருப்பூரில் அதிகளவில் புற்றுநோய் பாதிப்பு

image

தொழில் நகரம் என்ற அந்தஸ்து பெற்ற திருப்பூரில், பல்வேறு மாவட்ட, பிற மாநில மக்கள் வசிக்கின்றனர். ‘பணம், பொருள் ஈட்டும் ஆற்றல் அதிகரித்து வரும் அதே நேரம், புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது’ என்பது ஆய்வறிக்கை தெரிவிக்கும் வேதனையான உண்மை. ‘கண்களை விற்று சித்திரம் வாங்குவதா?’ என் வார்த்தை சால பொருந்துவதாக அமைந்திருக்கிறது.

News November 7, 2024

மாற்றுத்திறனாளிகள் முகாம்: இந்த மாதம் முழுவதும் ரத்து

image

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அறை எண் .20-ல் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நிர்வாக காரணங்களால் நவம்பர் -2024 முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.