Tiruppur

News November 10, 2024

த.வெ.க. கொடி, துண்டு, பேட்ஜ் தயாரிப்பு ஆர்டர் வருகை அதிகரிப்பு

image

பனியன் தொழில் நகரான திருப்பூரில் பின்னலாடைகள் தயாரிப்பு மட்டுமில்லாமல் அரசியல் கட்சியினருக்கான கொடிகள், துண்டுகள், பேட்ஜ்கள் தயாரிப்பும் மும் முரமாக நடைபெற்று வரு கிறது. சமீபத்தில் நடை பெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்காக தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிகள், பேட்ஜ்கள், மப்ளர் துண்டுகள் திருப்பூரில் அதி கம் தயாராகி விற்பனையானது.

News November 10, 2024

திருப்பூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி ,ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி, பட்டம் மேற்படிப்பு படிக்கும் பிற்படுத்தோர் மிகவும் பிற்படுத்த சீர் மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற https:// bcmbcmw.tn.gov.in/welfare schemes.htm#scholarship என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்க ஆட்சியர் அறிவித்துள்ளார். 

News November 10, 2024

 சிறப்பு பஸ்; ரூ.1.13 கோடி வருவாய் ஈட்டியது

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருப்பூரில் இருந்து அக்., 28 முதல், 30 ம் தேதி வரையும், நவ., 2 மற்றும், 3 ம் தேதி, 356 சிறப்பு பஸ்கள் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டது. ஐந்து நாட்கள் சிறப்பு பஸ் இயற்றப்பட்டதன் மூலம் திருப்பூர் மண்டலம், 1.13 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. மேலும் 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் பயணித்ததாகவும் மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 10, 2024

முன்னாள் படை வீரர்களுக்கான ஓய்வூதிய குறைதீர் முகாம்

image

ஸ்பர்ஸ் மூலம் பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ராணுவம், கடற்படை, விமானப்படையை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தல் ஏற்படும் சிரமங்கள் மற்றும் ஓய்வூதியம் சம்பந்தமான சிறப்பு முகாம்  வருகின்ற 12ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News November 10, 2024

அதிகாரிகளை வறுத்தெடுத்த கவுன்சிலர் கணவர்

image

திருப்பூரில் தன்னிடம் கூறாமல் மாநகராட்சி அதிகாரிகள் பணி தொடங்கியதாக, திமுக பெண் கவுன்சிலர் கணவர், அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. 2 மண்டலத்திற்கு உட்பட்ட 19 வார்டு கவுன்சிலராக லாதா என்பவர் உள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்த போது, கவுன்சிலர் கணவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

News November 9, 2024

தேசிய நீச்சல் போட்டி: திருப்பூர் அரசு பள்ளி மாணவி தேர்வு

image

திருப்பூர், குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவி அர்ச்சனா, தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில், தேசிய நீச்சல் போட்டி, 24 முதல், 30ம் தேதி வரை நடக்கிறது இதில் 19 வயது பிரிவில் பங்கேற்க, தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்மாநில அளவில் அதிக வெற்றி பெற்ற அர்ச்சனா, தேசியப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 9, 2024

திருப்பூர் மாவட்ட கைப்பந்து அணிக்கு பாராட்டு

image

வேலூரில், மூன்று நாட்கள் மாநில அளவிலான ஆண்கள் கைப்பந்து போட்டி நடந்தது. இதில், பங்கேற்ற திருப்பூர் அணி, 4வது இடம் பெற்றது. அரை இறுதியில் சென்னை அணியிடம் போராடி தோற்றதால், 4வது இடம் பெற்றது. இருப்பினும், மாநில போட்டியில் நீண்ட இடைவெளிக்குப் பின் 4வது பெற்ற திருப்பூர் மாவட்ட ஆண்கள் வாலிபால் அணியை, மாநில கைப்பந்து கழக துணை சேர்மன் ரங்கசாமி, திருப்பூர் மாவட்ட கைப்பந்து கழக நிர்வாகிகள் பாராட்டினர்.

News November 9, 2024

திருப்பூரி்ல் ஊர்காவல்படைக்கு ஆட்கள் தேர்வு

image

திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் ஊர்காவல் படை நேர்முக உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் உதவி ஆணையாளர் மனோகரன், ஊர்க்காவல் படை மண்டல தளபதி பண்பு அரசன், மாநகர காவல் உதவி ஆணையாளர் சுப்புராம், உதவி ஆய்வாளர் வெங்கடாசலம் மற்றும் காவலர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

News November 9, 2024

நவ.22இல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

திருப்பூர் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22ம் தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் குமரன் சாலையில் உள்ள சப் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். தங்களது கோரிக்கைகள் குறித்து தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என சப் கலெக்டர் மோகனசுந்தரம் தெரிவித்துள்ளார்.

News November 9, 2024

திருப்பூரில் பட்டய கிளப்பிய 11 பேர்: கலெக்டர் பாராட்டு

image

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் படித்த 11 பேர் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 போட்டித் தேர்வில் பயிற்சி வகுப்பில் படித்த ஒன்பது பேரும் அதன் கிளை பயிற்சி மையமான உடுமலையில் படித்த இரண்டு பேரும் மொத்தம் 11 பேர் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர். திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.