India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டத்தில், 30 ஆயிரத்து 235 மாணவ, மாணவியர் பொது தேர்வை எழுத உள்ளனர். 104 தேர்வு மையங்களில் தேர்வு நடக்க உள்ளது. தேர்வு நடக்கும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், முன்னேற்பாடுகள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. 10ஆம் வகுப்பு தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது நிறைவுபெற்று தயார் நிலையில் உள்ளன.
கோவை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலர் கர்னல் அன்சூல் வர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கான தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றார். உடனே SHARE பண்ணுங்க
திருப்பூர்: AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.
திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் திருப்பூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். இதில் அரசு அலுவலர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் இன்று சென்னையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் கே.என்.நேருவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இன்று சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பனியன் தொழில் மாநகரமான திருப்பூரில் நாளுக்கு நாள் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருகின்றன. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசே தடை விதித்திருந்தாலும் கூட, பல்வேறு பகுதிகளில் தடை இல்லாமல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை பயன்பாடு முடிந்த பிறகு குப்பைகளில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த நஞ்சப்பா நகர் பகுதியில் வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் வைத்து விபச்சாரம் நடத்தியதாக சாரதி என்ற புரோக்கரை கைது செய்தனர். இரண்டு பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் விவசாய சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று முன்தினம் திருப்பூர் ரயில் நிலையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ரயிலை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சட்டத்தைச் சேர்ந்த 43 பேர் மீது திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருப்பூரில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் நிரப்பப்படும் போஸ்ட் ஆபீஸ்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு மொத்தம் 21,413 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. <
Sorry, no posts matched your criteria.