India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும் . அஞ்சல்துறையில் 21,413 கிராம அஞ்சல் பணியாளர்கள் (GRAMIN DAK SEVAKS -GDS) புதிதாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க<
திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ம் வகுப்பு தேர்ச்சி போதும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கிளிக் செய்யவும். மார்ச்4 கடைசி தேதி.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் இருந்து மூலனூர் செல்லும் சாலையில் புதுப்பை அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் யாரும் கரையோர பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் குளிக்கவும் துணி துவைக்கவும் புதுப்பை அமராவதி ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் தொழில் கூட்டமைப்புடன் பட்ஜெட் விளக்க கலந்துரையாடல் கூட்டம் காங்கயம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகை குஷ்பு பெண்கள் பாதுகாப்பிற்காக அனைத்து கட்சியைச் சேர்ந்த பெண்களை ஒருங்கிணைத்து மாநில அரசு சார்பில் கூட்டுக் கமிட்டி அமைக்க வேண்டும் என தெரிவித்தார். உடன் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன், நிர்வாகிகள் இருந்தனர்.
திருப்பூரில் கடந்த ஒன்றரை மாதத்தில் 107 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் வங்கதேசத்தில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நேரில் சென்று விசாரணை செய்ததில், நோடி(36), சல்மா(20) சாகஜலால் காஜி(27) என 3 பேரும் உரிய ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக தங்கியிருப்பது தெரிந்தது. இதனையடுத்து 3 பேரை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்ட காவல்துறை இரவு நேர ரோந்து பணியில் இருக்கும் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டு பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இரவு ரோந்து பணியில் இருக்கும் அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
திருப்பூரில் திருமுருகன் பூண்டியில் மிகவும் பிரபலமானது திருமுருகநாதர் கோயில் ஆகும் . இது சுந்தரர் பாடிய தேவார திருமுறை பெற்ற 204வது தலமாகும். இங்குள்ள பிரம்மதீர்த்தத்தில் குளித்தால் மனநோய் நீங்கும். சண்முகதீர்த்தத்தில் குளித்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் குழந்தைபாக்கியம் கிட்டும் என நம்பப்படுகிறது. இக்கோயிலுக்கு சென்றவரகள் அன்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று வெளியிட்டார். திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 2025-26ஆம் நிதியாண்டில் ரூ.46,004.98 கோடிக்கு கடன் வழங்க நிர்ணக்கபட்டுள்ளது. இது கடந்த ஆண்டு கடன் திட்ட அறிக்கையைக் காட்டிலும் ரூ.6,987.29 கோடி கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.