India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நமது பாரம்பரிய வரலாற்று உணவு பானமான கள் அருந்துவதை, விற்பதை இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 21 மற்றும் 47-இன் படி உணவு தேடும் உரிமையின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கள்ளை தமிழ்நாட்டின் மதுவிலக்கு சட்டத்தில் இருந்து நீக்கி, மரபுவழி உணவுப் பானமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பல்லடத்தில் பிப்ரவரி 24-ஆம் தேதி கள் விடுதலை மாநாடு நடைபெறவுள்ளது.
மூலனூர் பகுதியில் முக்கிய பிரமுகரின் தந்தை மறைவிற்கு நேரில் ஆறுதல் சொல்வதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மாலை மூலனூர் வருகை புரிந்தார். பின்னர் அவர் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை தங்கள் பகுதியில் வெறிநாய்கள் தொடர்ந்து ஆடுகளை கடித்து பலியாகி வரும் பிரச்சனை பற்றியும் காவல்துறையினர் அத்துமீறல் பற்றியும் எடுத்து கூறினர்.
திருப்பூர் பெருமாநல்லூரில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோயில். சக்திவாய்ந்த கொண்டத்துக்காளியம்மனை, சேரர்கள், போருக்கு செல்லும் முன்பு வணங்கி செல்வார்களாம். தடைகளை போக்கும் சர்வ வல்லமை கொண்ட அம்மனை வழிபட்டால், குடும்ப பிரச்சனை தீர்வதோடு, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. குண்டம் திருவிழாவில், விரதம் இருந்து குண்டம் இறங்கினால், அம்மன் வேண்டிய வரத்தை தருவாளாம்.
வங்கதேசத்தினர் ஊடுருவல் குறித்து திருப்பூரில் போலீசார் விசாரணையில் கான்ஜன் அலி, முகமது மொனிருல் இஸ்லம், மிலோன் ஆகியோர் உரிய ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக தங்கியிருப்பது தெரிந்தது. இதேபோல் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆலம்கீர் சர்தார், அரீப் மியா என்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து சட்டவிரோதமாக வரும் வெளிநாட்டவர் கைது செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவன் திரிபுரத்தை அழிக்க, மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது, அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது. பார்வதி, அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு வந்து குடிகொண்டாரம். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும், சிவன்மலை முருகனை வழிபட்டால் கிடைக்கும்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக் டர் கிறிஸ்துராஜ் தலைமையில் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு வங்கி சார்பில் 2025-26 நிதியாண்டுக்கான திருப்பூர் மாவட்டத்தின் கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டார். இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறுகையில், 2025-26ம் ஆண்டிற்கான முன்னுரிமை கடன்களுக்கான மொத்த திட்ட இலக்கு ரூ.46,004.98 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி திருமுருகன், பூண்டி,பல்லடம் நகராட்சியில் சாமலாபுரம், அவிநாசி, ஊத்துக்குளி பேரூராட்சிகள் மற்றும் 54 கிராம ஊராட்சிகளுடன் 1031.66 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உடன் உள்ளூர் திட்ட குழுமத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. நீடித்த நிலையான வளர்ச்சியுடன் ஜவுளி கண்டுபிடிப்புகளுடன் மையமாக திருப்பூர் செழித்து வளர்ந்து வரும் நிலையில் தற்போது புதிய மாஸ்டர் பிளான் உருவாகி வருகிறது.
திருப்பூர் மாவட்ட வருவாய் கோட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 21ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. விவசாயிகள் கூட்டம் திருப்பூர் ஆர்.டி.ஓ. மோகனசுந்தரம் தலைமையில் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு<
டெல்லியில் மத்திய அரசின் சார்பில் பாரத் டெக்ஸ் 2025 என்ற பெயரில் சர்வதேச அளவில் பின்னலாடை மற்றும் ஜவுளி கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் திருப்பூர் தொழில் துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பார்வை மேற்கொண்ட பிரதமர் மோடி திருப்பூரின் ஜீரோ டிஸ்சார்ஜ் மறுசுழற்சி உள்ளிட்ட முறைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.