Tiruppur

News February 21, 2025

திருப்பூரில் வேலைவாய்ப்பு முகாம்!

image

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (பிப்.21) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தனியார் நிறுவனங்களில் செவிலியர், டெய்லர், கணினி ஆபரேட்டர், தட்டச்சர், டிரைவர் போன்ற பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். எனவே வேலை வாய்ப்பு தேடுபவர்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 21, 2025

அவிநாசியில் மாபெரும் கண் சிகிச்சை முகாம்

image

திருப்பூர் கே ஆர் சன்ஸ் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் வரும் 23ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை, செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதாகவும், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு, தங்களது கண்களை பரிசோதித்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 21, 2025

மாபெரும் விவசாய கண்காட்சியில் பங்குகொள்ள அழைப்பு

image

உடுமலை தமிழிசைச் சங்கம் சார்பில் “அறுவடை” எனும் மாபெரும் விவசாய கண்காட்சி இந்த வருடம் மே மாதம் 2,3,4 ஆகிய தேதிகளில் உடுமலை ஜிவிஜி கலையரங்கத்தில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. உடுமலையில் நடைபெறும் இந்த மாபெரும் விவசாயக் கண்காட்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தங்களது சந்தேகங்களுக்கு 9363181323 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News February 21, 2025

‘திருப்பூர் தின விழா’ – கலெக்டர் தொடங்கி வைக்கிறார்

image

திருப்பூர் நகரம் பின்னலாடை தொழில் மூலமாக டாலர் சிட்டி என்ற பெருமையை பெற்றுள்ளதுடன் வந்தாரை வாழ வைக்கும் நகரமாகவும் திருப்பூர் விளங்கி வருகிறது. திருப்பூரின் பெருமையை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும் பிரபல நாளிதழ், திருப்பூரை சேர்ந்த பல்வேறு தொழில் & தொண்டு நிறுவனங்கள் இணைந்து ‘திருப்பூர் தின விழா’ வருகிற பிப்,23 ம் தேதி சிக்கண்ணா அரசு கல்லூரியில் கலெக்டர் தொடங்கி வைக்கிறார்.

News February 20, 2025

திருப்பூர் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

News February 20, 2025

ரூ.30,000 சம்பளம்: திருப்பூர் போஸ்ட் ஆபிஸில் வேலை

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 95 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். மார்ச் 3ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்க <<>>வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 20, 2025

திருப்பூர்: ‘பின்னலாடை ஏற்றுமதி 12% அதிகரிப்பு’

image

இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகமானது கடந்த 10 மாதங்களில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 11,583 மில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதி தற்போது 12,923 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதில், 2025 ஜனவரியில் மட்டும் 1,606 மில்லியன் டாலர்களை எட்டி தற்போது 12 சதவீதம் அதிகரித்துள்ளது என திருப்பூர் ஏஇபிசி துணைத் தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.

News February 20, 2025

திருப்பூர்: குவாரி குத்தகை உரிமம் கோர விண்ணப்பிக்கலாம்

image

திருப்பூர் மாவட்டத்தில் சாதாரண கற்கள் மண் கிராவல் மண் கிரானைட் போன்ற சிறுவகை கனிமங்கள் மற்றும் 31 வகையான சிறு கனிமங்களுக்கான குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்கள் மற்றும் செங்கல் சூளை பதிவு சான்று பெறுவதற்கான விண்ணப்பங்கள் வருகின்ற 24ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக பெறப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News February 20, 2025

திருப்பூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

திருப்பூர் ஆட்சியர் அலுவலக நான்காவது தளத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21-02-2025 வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, மற்றும் ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் என வேலை தேடுபவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவம் கொண்டு வர வேண்டும்.

News February 20, 2025

பல்லடத்தில் ‘கள்’ விடுதலை மாநாடு அறிவிப்பு

image

நமது பாரம்பரிய வரலாற்று உணவு பானமான கள் அருந்துவதை, விற்பதை இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 21 மற்றும் 47-இன் படி உணவு தேடும் உரிமையின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கள்ளை தமிழ்நாட்டின் மதுவிலக்கு சட்டத்தில் இருந்து நீக்கி, மரபுவழி உணவுப் பானமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பல்லடத்தில் பிப்ரவரி 24-ஆம் தேதி கள் விடுதலை மாநாடு நடைபெறவுள்ளது.

error: Content is protected !!