India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். எவ்வளவோ மறுத்தும் திருமண ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இலவச உதவி தொலைபேசி சேவை எண் 1098- க்கு அழைத்து சிறுமி புகாரளித்தார். இதையடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் “Myv3ads நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. இதுதவிர கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் இயங்கி வந்தது. பின் மோசடி புகாரால் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்ட நிலையில், ஏமாற்றம் அடைந்தவர்கள் காலம் தாமதிக்காமல் புகார் அளிக்கலாம் என கேட்டுக்கொண்டனர்.
காங்கேயம் தொகுதியில் தெரு நாய்களால் கடிபட்டு, 474 செம்மறியாடுகள், 65 வெள்ளாடுகள், 286 கோழிகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டி என 826 கால்நடைகள் இதுவரை இறந்துள்ளன. கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ், இழப்பீடு வழங்குவது தொடர்பாக ஆவண செய்ய வேண்டும் என திருப்பூர் கலெக்டர் வாயிலாக அமைச்சர் சாமிநாதன், தலைமை செயலருக்கு பரிந்துரை கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். எவ்வளவோ மறுத்தும் திருமண ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இலவச உதவி தொலைபேசி சேவை எண் 1098- க்கு அழைத்து சிறுமி புகாரளித்தார். இதையடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
திருப்பூர் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்றுநடைபெறுவதாக இருந்தது. தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் இந்த கூட்டம் வருகிற 26ம் தேதிக்கு மாற்றப்படுகிறது. அன்று காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என சப் கலெக்டர் மோகனசுந்தரம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கயம், தாராபுரம் பகுதியில் இன்று 21.02.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தங்களது பகுதியில் பொதுமக்கள் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தரவின்படி அனைத்து வகை பள்ளிகளுக்கும்நாளை சனிக்கிழமை முழு வேலை நாள் வகை பள்ளிகளுக்கும் நாளை 22.02.2025 (சனிக்கிழமை) முழு வேலை நாள் ஆகும். இதனால் நாளை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகள் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயில் 32,438 குரூப் டி காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது மார்ச் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க இங்கே <
திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்தது. தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் இக்கூட்டமானது வரும் புதன் 26-02-2025(சனிக்கிழமை) காலை 11 மணியளவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
திருப்பூருக்கு ரயில் மூலம் ஹெராயின் கடத்தி வருவதாக, வடக்கு போலீசருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனை செய்தபோது ரயிலில் வந்து இறங்கிய, வடமாநில வாலிபரை சோதனை செய்தனர். இதில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த விகாஸ் குமார் (20) என்பதும், அவர் திருப்பூரில் வேலை பார்க்கும் அவரது நண்பரான அபிஷேக் குமார் (25) என்பவருக்கு, 3.300 கிராம் ஹெராயின் கொண்டு வந்தது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.