Tiruppur

News April 1, 2024

நுகர்வோர் ஆணைய தலைவரின் காரில் ரூ.80,200 பறிமுதல்

image

திருப்பூர், காங்கயம் ரோடு புதுப்பாளையம் தனியார் பள்ளி அருகே தேர்தல் கண்காணிப்பு குழு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய தலைவர் சித்ரா என்பவரின் காரில் சோதனை நடத்தினர். சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி ரொக்க பணம் ரூ.80 ஆயிரத்து 200 வைத்திருந்தால் அப்பணத்தை பறிமுதல் செய்தனர்.

News April 1, 2024

திருப்பூர் அருகே விற்பனை அதிகரிப்பு

image

உடுமலைப் பகுதியில் தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மக்கள் வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில பஸ் ஸ்டாண்ட், ரயில்வே கேட், தளி ரோடு ,தாராபுரம் சாலை பகுதிகளில் நுங்கு விற்பனை தீவிரம் அடைந்துள்ளது ஒரு நுங்கு பத்து ரூபாய்க்கும், பதநீர் ஒரு டம்ளர் 25 ரூபாய்க்கும் விற்பனை ஆனாலும் விலை ஏற்றத்தை பொருட்படுத்தாமல் மக்கள் அதிக அளவு வாங்கி செல்கின்றனர்.

News April 1, 2024

திருப்பூர்: எச்சரிக்கை பலகை வைக்காததால் விபத்து

image

கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காங்கேயம் பகுதியில் பல்லடம் முதல் வெள்ளகோவில் வரை உள்ள சாலைகளை அகலப்படுத்தும் பணி கடந்த பல மாதங்களாக நடைபெற்றுவருகிறது. இருவழிச் சாலையாக உள்ள இதை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. பணி தாமதமாவதாலும், எச்சரிக்கை பலகை வைக்காததாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

News April 1, 2024

திருப்பூரில் 53 ஆயிரத்து 440 ரூபாய் பறிமுதல்

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதன் காரணமாக மாவட்டம் முழுவதும் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காங்கேயம் சாலையில் நடைபெற்ற சோதனையின் போது செல்வக்குமார் என்பவரது நான்கு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த 53,440 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் இன்று பறிமுதல் செய்தனர்.

News April 1, 2024

‘கச்சத்தீவை தாரைவார்த்த இந்திரா, கருணாநிதி’

image

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பொங்கலூர் ஒன்றிய பகுதியில் பல்வேறு கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கே.அண்ணாமலை பேசுகையில், கச்சத்தீவை தாரைவார்த்ததன் மூலம் நாட்டுக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் துரோகம் செய்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார்.

News April 1, 2024

திருப்பூர் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

image

உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்துகொள்ளும் கிரிக்கெட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 29) தொடங்கியது. மாவட்டத்திலிருந்து 12 அணிகள் கலந்துகொண்ட நிலையில் நேற்று (மார்ச் 31) பரபரப்பாக நடைபெற்று முடிந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

News March 31, 2024

திருப்பூர்: பாலியல் தொழில்.. 2 பேர் கைது

image

திருப்பூர் வளர்மதி பஸ் நிறுத்தம் அருகே உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த 2 பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து மசாஜ் சென்டர் உரிமையாளர் கார்த்திக் மற்றும் ஊழியர் கார்த்திகேயன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

News March 31, 2024

5 கிலோ கஞ்சாவுடன் வட மாநில வாலிபர்கள் கைது

image

திருப்பூர் அவிநாசி ரோடு திலகர் நகர் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அங்கு அஞ்சு கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News March 31, 2024

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது

image

சேவூர் அருகே பெரிய கண்ணூரில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அங்குள்ள குளத்துப் பகுதிக்குச் சென்றார். அப்போது அந்தப் பெண்ணை பின் தொடர்ந்து சென்ற அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். அப்போது பொதுமக்கள் வினோத்தை பிடித்து காவல் நிலையத்தில் நேற்று ஒப்படைத்தனர். 

News March 31, 2024

பெண்ணை துன்புறுத்திய வழக்கில் கணவர் கைது

image

காங்கேயம் சிவன்மலையைச் சேர்ந்தவர் சிவ பாரத், பூ வியாபாரி. அதே பகுதியைச் சேர்ந்த பூர்ணிமா. இருவரும் ஓராண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சிவ பரத் தன்னை அடித்து துன்புறுத்தியதாக பூர்ணிமா அளித்த புகாரில் சிவபாரத்தை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நேற்று போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!