India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அவிநாசி செம்பியநல்லூர் ஊராட்சி ஸ்ரீ ராம் நகர் வ உ சி வீதியை சேர்ந்தவர் கார்த்திக், மனைவி வித்யா. இவர்களுக்கு மகன் அகில்(3). இவர்கள் மூவரும் நேற்று தங்கள் வீட்டின் வாசற்படியில் உட்கார்ந்து இருந்தனர். அப்போது அங்கு வந்த தெரு நாய் ஒன்று எதிர்பாராத நேரத்தில் சிறுவன் அகில் கண்ணத்தில் கடித்து சென்றது. உடனடியாக சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் தற்சமயம் வெகுவாக குறைந்து வருகின்றது. இந்த நிலையில் பிரதான கால்வாயில் ஷட்டர் பழுதானதால் தொடர்ந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டு உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஷட்டரை பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தற்சமயம் திருமூர்த்தி அணை 60 அடியில் 15 அடி நீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் கடந்த மார்ச் மாதம் 17 வயது சிறுமி கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் சிறையில் உள்ள மூலனூர் அதிமுக நிர்வாகி தினேஷ் (27), வெள்ளகோவில், பிரபாகர் (32), மணிகண்டன் (29), தமிழ்செல்வன் (எ) சதீஸ் (28), நவீன்குமார் (26), நந்தகுமார்(30), பாலசுப்பிரமணி (30), மோகன்குமார் (30) ஆகிய 8 பேர் மீது இன்று குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (மே.04) இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த செல்வி கேஸ் ஐயப்பன் இவரின் மகன் தீபக் சாரதி சென்னை அருகே கல்லூரியில் 2-ம் ஆண்டு பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். மே தினத்தன்று தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற போது உயிர் இழந்தார். இவரது உடல் நேற்று இரவு உடுமலை கொண்டுவரப்பட்டு மின் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா ஊத்துக்குளியை சேர்ந்தவர் வடிவேல்(25), கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்து வருகிறார். இவர் 30 வயதான தனது உறவுக்கார பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பின்னர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் வடிவேலை நேற்று(மே 3) போலீசார் கைது செய்தனர்.

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்து கோவை அழைத்து வந்தனர். கோவை நோக்கி வந்து கொண்டிருந்தபோது தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் லாரி மோதியதில் சவுக்கு சங்கர் அழைத்துவரப்பட்ட வாகனம் விபத்துக்குள்ளானது. காயமடைந்த சவுக்கு சங்கருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் ராக்கியாபாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் கோபி (37), டிரைவர். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கோபிக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் கடந்த 4 மாதங்களாக கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். இதனால் விரக்தி அடைந்த கோபி விஷம் தின்று நேற்று தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி கடந்த பல மாதங்களாக நடைபெற்றுவருகிறது. இதுவரை இந்த இரு வழிச்சாலையை தற்போது நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்த நெடுஞ்சாலை ஓரங்களில் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. எனவே காங்கேயம் கரூர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

காங்கேயம் நகரத்தில் நகர ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெறும் 9ஆம் ஆண்டு புத்தக திருவிழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவங்கி வைத்தார். இதில் மாவட்ட கழக செயலாளர் பத்மநாபன் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர கழக செயலாளர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.