India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சமூக நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தினரை கல்வி கற்ற பெண்கள் மட்டுமே உருவாக்க முடியும் என்பதற்காக புதுமைப்பெண் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. இதுவரை கல்லூரி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலமாக 8,584 மாணவிகள் மாதம் ஆயிரம் ரூபாய் வாங்கி பயன் பெற்று வருகின்றனர்.

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று(மே 9) ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு மண்டல உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நேற்று நடந்தது. இதில் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் பேசுகையில்,
வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதும் , புதிய ஆர்டர் வரத்து அதிகரிக்கும்; அவற்றை எதிர்கொள்ள திருப்பூர் தயாராக வேண்டும்,” என, ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் நேற்று பேசினார்.

திருப்பூர், ‘நிப்ட்-டீ’ கல்லூரியில் இந்தியா ‘லிம்கா’ புத்தக சாதனைக்காக, சுவரில் தேர் கோலம் உருவாக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில், 26 ஆண்டுகளாக செயல்பட்டு வரும், ‘நிப்ட்-டீ’ கல்லுாரியில், ‘லிம்கா’ சாதனைக்காக, சுவரில் தேர் கோலம் வரையப்பட்டுள்ளது. கையை எடுக்காமல், தொடர்ந்து வரையும் தேர் கோலம், இந்தியா ‘லிம்கா’ புத்தக சாதனைக்காக வரையப்பட்டதாக கல்லுாரி நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு உரிய விதிமுறைகளை பின்பற்றி மாதந்தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலமாக இதுவரை 3 லட்சத்து 99 ஆயிரத்து 148 குடும்பத்தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது என மாவட்டம் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியான கல்லூரி கனவு நிகழ்ச்சி மாவட்டம் தோறும் நடத்தப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இந்நிகழ்ச்சியை நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

திருப்பூர், மங்கலம் அடுத்த சாமலாபுரத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் பாட்சா (30). இவர் வாடகை கார் ஓட்டி வருகிறார். நேற்று இரவு இவருடைய காரில் வட மாநிலத்தைச் சேர்ந்த (38) வயது பெண்ணும், 15 வயது சிறுமியும் வந்துள்ளனர். அப்போது 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் போலீசார் இன்று சிக்கந்தர் பாட்சாவை கைது செய்தனர்.

உடுமலையில் வசித்து வந்தவர் கிஷோர். இவர் தன் சொந்த ஊரான பள்ள பாளையம் கிராமத்தில் நேற்று மதியம் தோட்டத்திற்கு தண்ணீர் எடுத்து விடுவதற்காக சென்றார். அப்போது கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டதாக தெரிகிறது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிஷோரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி கிஷோர் உயிர் இழந்தார்.

தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் போதிய அளவு குடிநீரை குடிக்க வேண்டும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க எலுமிச்சை ஜூஸ் மற்றும் இளநீர் உள்ளிட்ட பழச்சாறுகளை அருந்த வேண்டும், முடிந்தவரை வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும், பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.