India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பலவஞ்சி பாளையத்தில் செயல்படும் வேலவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பிரியதர்ஷினி 494 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். ஜெனிஷா 492 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், சண்முகப்பிரியா 491 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றார். இந்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டுக்கள் நேற்று தெரிவிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (மே.11) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சரும் ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளருமான செங்கோட்டையன் ஆகியோர் தங்களது இல்ல திருமண விழா பத்திரிகையை முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரில் நேற்று இரவு வழங்கினர்.

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. தமிழகத்தில் 8 மாணவிகள் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் நான்கு மாணவிகள் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். திருப்பூர் புலவஞ்சிபாளையம் வேலவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அக்ஷயா உள்ளிட்ட மூன்று பள்ளிகளை சேர்ந்த மாணவிகளும், அரசு பள்ளி மாணவியும் சாதனை படைத்தனர்.

பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை முன்பு நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில் வேல் தலைமை தாங்கினார். நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 145 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாநகர், அங்கேரிபாளையம் மண்டல பாஜக சார்பில், தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் கஸ்துாரி மஹாலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மண்டல தலைவர் ராம்குமார் தலைமை வகித்தார், மாவட்ட துணை தலைவர்கள் பாலு, தங்கராஜ், மண்டல பொது செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நடைபெற்று நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தமிழ் பாடத்தில் நான்கு பேரும், ஆங்கில பாடத்தில் ஆறு பேரும், கணித பாடத்தில் 910 பேரும், அறிவியல் பாடத்தில் 279 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 220 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். பாடம் வாரியாக மொத்தம் 1419 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி கௌசல்யா என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. இதில் ஒரே பிரசவத்தில் கௌசல்யா பால்பாண்டி தம்பதியினருக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் என மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது. மேலும், குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.73% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 84.12 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 91.16 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் திருப்பூர் மாவட்டம் 26ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.