Tiruppur

News May 16, 2024

வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு

image

திருப்பூர், நிப்ட்-டீ ஆடை வடிவமைப்பு கல்லுாரியில், தேசிய ஆடை வடிவமைப்பு மற்றும் நெட் பேஷன் டெக்னாலஜி நுழைவுத்தேர்வு நடந்தது. இத்தேர்வில், கிட்ஸ் கிளப் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர் சஜிஷ்னு பங்கேற்றார். தேசிய அளவில் 2 லட்சம் பேர் எழுதிய தேர்வில், 28வது இடமும், ஓ.பி.சி., என்.சி.எல். பிரிவில் 4ம் பெற்று, சாதனை படைத்தவருக்கு நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News May 15, 2024

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

image

முதலமைச்சர் திட்டத்தின் கீழ் திருப்பூர் தெற்கு தொகுதியின் நீண்டகால பிரச்சனைகள் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு எம்.எல்.ஏ செல்வராஜ் கோரிக்கைகள் வைத்திருந்தார். அதைதொடர்ந்து வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ரூ.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே மக்கள் சார்பாக, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக எம்எல்ஏ செல்வராஜ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News May 15, 2024

திருப்பூர் மழைப்பொழிவு விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று (மே.14) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, உடுமலைப்பேட்டையில் 6 செ.மீட்டரும், திருப்பூர் PWD பகுதியில் 3 செ.மீட்டரும், திருப்பூர் தெற்கு பகுதியில் 2 செ.மீட்டரும், மடத்துக்குளம் பகுதியில் 1செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News May 15, 2024

திருப்பூரில் வட மாநில வாலிபர் குத்திக்கொலை

image

திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் குமார். இவர் நேற்று இரவு பணி முடிந்து தங்கும் விடுதிக்கு சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரின் செல்போனை கேட்டு மிரட்டப்பட்டுள்ளார். செல்போனை தர மறுத்ததால் ஆகாஷ் குமாரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை உயிரிழந்தார்.

News May 15, 2024

ஆங்கில வழி பிரிவை சேர்க்க கோரி முதல்வருக்கு மனு

image

உடுமலை அடுத்துள்ள பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 ஆங்கில மொழி கலைப்பிரிவு அட்மிஷன் மறுக்கப்படுவதால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே பொதுமக்கள் தரப்பில் தமிழக முதல்வருக்கும் கல்வித்துறை அமைச்சருக்கும் பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி பிரிவில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என இன்று மனு அனுப்பியுள்ளனர்.

News May 15, 2024

அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

image

திருப்பூர், தாராபுரம், உடுமலையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கு கடந்த 10ம் தேதி முதல் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 8ம் வகுப்பு தேர்ச்சி (அ) எஸ்எஸ்எல்சி, கல்லூரி மாணவ மாணவிகள் பல்வேறு பொறியியல் மேம்பட்ட தொழில் நுட்ப படிப்புகளுக்கான இண்டஸ்ட்ரி 4.0 மற்றும் பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளில் சேர்ந்து பெறலாம் என அரசினர் தொழில்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு தெரிவித்தார்.

News May 15, 2024

திருப்பூர்: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு விருது

image

தமிழக அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி கௌரவித்துவருகிறது. இந்த ஆண்டுக்கான சிறப்பாக தொழில்புரிந்து வரும் தொழில்முனைவோர்கள் விருதுபெற விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News May 15, 2024

பிளஸ் ஒன் பொதுத் தேர்வில் 90 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 90 அரசு மற்றும் பள்ளியைச் சேர்ந்த 90 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அதன்படி நான்கு அரசு பள்ளிகள், ஒன்று நகரவை பள்ளி, ஒன்று பகுதி பெரும் பள்ளி, 75 மெட்ரிக் பள்ளிகள், ஒன்பது சுய நிதி பள்ளிகள் என 90 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

News May 15, 2024

திருப்பூர்: 5 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

image

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் ஐந்து அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி நேற்று பெற்றது. சூரியம்பாளையம் எஸ் முருகப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் 18 மாணவர்கள், 13 மாணவிகள் என 31 பேர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். அதேபோன்று புது ராமகிருஷ்ணாபுரம் நகரவை மேல்நிலைப் பள்ளியில் 152 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

News May 15, 2024

கணினி அறிவியலில் 351 பேர் நூற்றுக்கு 100 மதிப்பெண்

image

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் பாடவாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றவர்கள் விவரம்: தமிழ் பாடத்தில் 7 பேரும், இயற்பியலில் 66 பேரும், வேதியியலில் 76 பேரும், கணக்கில் 57 பேரும், வேளாண்மை அறிவியல் பாடத்தில் 39 பேரும், ஆடிட்டிங் பிரிவில் 28 பேரும் என மொத்தம் 351 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து நேற்று சாதனை படைத்துள்ளனர்.

error: Content is protected !!