India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர் 2024-25ம் கல்வி ஆண்டில் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் கல்லூரியில் சேர்வதற்கான சார்ந்தோர் சான்று பெற்று பயனடையலாம். விவரங்களுக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம், அறை எண்.523, முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர், திருப்பூர் 641604 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என நேற்று கலெக்டர் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் நகர மன்ற தலைவராக பாப்பு கண்ணன் உள்ளார். இவர் நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜை சந்தித்து நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு உடனடியாக வீட்டுமனை வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனுவை நேற்று மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜிடம் வழங்கினர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது பிளஸ் டூ தேர்ச்சி பெறாத 23 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு உயர்கல்விக்கு செல்ல வேண்டும். மேலும் பிளஸ் டூ முடித்த அனைவரையும் உயர்கல்வியில் சேர உயர்கல்வி வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.

திருப்பூரில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு அவிநாசி காங்கேயம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் விளைவித்த பல்வேறு வகையான காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. நிலையில் திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. அதைத்தொடர்ந்து பீன்ஸ் ஒரு கிலோ 200 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதிய வேளையில் லேசான மழை பெய்தது. இந்நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி திருப்பூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு பின்வருமாறு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் முகாமில் உலகத்தில் ஐந்து புள்ளி என்பது மில்லி மீட்டர் மழையும், தெற்குப் பகுதியில் ஒரு மில்லி மீட்டர் மழையும், பல்லடத்தில் 3.20 மில்லி மீட்டர் மழையும், மூலனூரில் 4 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வைத்திருப்பவர்கள் மற்றும் சொத்தின் உரிமையாளர்கள் 2024 -2025ம் ஆண்டிற்கான முதல் மற்றும் இரண்டாவது அரையாண்டிற்கான சொத்து வரியினை செலுத்தினால், சொத்து வரியில் உடனடியாக 5 சதவீதம் தள்ளுபடியை ஊக்கத்தொகையாக பெற்றுக்கொள்ளலாம் என திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருப்பூரிலுள்ள திருமூர்த்தி அணை, பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்தில் 1967ஆம் ஆண்டு பாலாறின் குறுக்கே கட்டப்பட்டது. பி.ஏ.பி., திட்டத்தில் பரம்பிக்குளம் அணையில் இருந்து, சர்க்கார்பதிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, மின் உற்பத்தி செய்த பின், காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைதொடர்களில் உள்ள அருவி, ஆறுகள் மூலம் நீர்வரத்து ஏற்படுகிறது.

திருப்பூரில் பிரசித்தி பெற்ற ஈஸ்வரன் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் இன்று கோவிலில் அறங்காவலர் குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார். நடந்து முடிந்த விழா பற்றியும், கோவிலில் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதில் பணியாளர்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திருப்பூரில் வார விடுமுறையை முன்னிட்டு இன்றும் நாளையும் 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். வெளியூர், பிற மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வஸ்துக்காக 40 சிறப்பு பேருந்துகள் திருப்பூர் மண்டலத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்துகள் கோவில் வழி பேருந்து நிலையத்திலிருந்தும், மத்திய பஸ் நிலையத்தில் இருந்தும் என 40 பஸ்கள் இயக்கப்படுகிறது.

திருப்பூர், வீரபாண்டியை சேர்ந்த சுடர்க்கொடி (36) என்ற பெண் விபத்தில் சிக்கி, தலையில் படுகாயமடைந்த நிலையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. சுடர்க்கொடியின் சடலத்துக்கு, மருத்துவமனை டீன் முருகேசன், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த ஒட்டுமொத்த மருத்துவ அதிகாரிகளும், ஊழியர்களும் அணிவகுத்து நின்று, நேற்று அஞ்சலி செலுத்தினர்.
Sorry, no posts matched your criteria.