India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று (ஜூன்.06) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மடத்துக்குளம் பகுதியில் 9 செ.மீட்டரும், வட்டமலை பகுதியில் 6 செ.மீட்டரும், அவராவதி அணை, திருமூர்த்தி அணை, நல்லதாங்கல் ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் இன்று 6.7.2024 (இரவு7 மணி வரை) திருப்பூர் மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சி விரிவாக்கம் செய்யும் வகையில் அருகில் உள்ள ஊராட்சிகளை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆறுமுத்தம்பாளையம் கணபதிபாளையம் மற்றும் கரைபுதூர் உள்ளிட்ட ஊராட்சிகளை மாநகராட்சி உடன் இணைப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் தங்கி பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். 2021ஆம் ஆண்டு 17 வயதுடைய சிறுமியை தேனிக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில் போக்சோ வழக்கில் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நேற்று மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

உடுமலை அடுத்த
ஆண்டியகவுண்டனூர் கிராமம் மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகாத்தாள். இவர் ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்திவருகிறார். இந்த நிலையில் நேற்று ஆண்டியகவுண்டனூர் பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது முருகாத்தாள் வளர்த்து வந்த ஆடு எதிர்பாராத விதமாக இடி தாக்கி பலியானது. இது குறித்து வருவாய்த் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (07.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.

உடுமலை அருகே திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியர் சன்னதியில் முருகனுக்கு உகந்த தினமான வைகாசி கார்த்திகையையொட்டி இன்று சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், நெய் என பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சுப்பிரமணியர் சந்தன காப்பு ராஜ அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

பல்லடம் அருகே உள்ள ரோட்டரி அவென்யூ பகுதியைச் சேர்ந்த மூதாட்டி சுபாக்களியிடம் கடந்த 2022ஆம் ஆண்டு 4.50 பவுன் தங்க நகையை வாலிபர் பறித்து சென்றார். இந்த வழக்கில் அரவக்குறிச்சியை சேர்ந்த செல்வம் என்பவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. செல்வம் என்பவருக்கு ஆறாண்டு சிறை தண்டனையும், பத்தாயிரம் அபராதமும் நேற்று வழங்கப்பட்டது.

ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் பிரகாஷ் அமோக வெற்றி பெற்ற நிலையில், வெள்ளகோவில் திமுக அலுவலகத்தில் இன்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் மற்றும் நகர செயலாளர் சபரி முருகானந்தம் ஆகியோர் தலைமையில் தேர்தல் பணி செய்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்து இன்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (06.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.