India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உடுமலை அருகே அமராவதி நகரில் மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் சைனிக் எனப்படும் ராணுவ பயிற்சி பள்ளி உள்ளது. பள்ளியில் நேற்று நிர்வாக குழு கூட்டம் தெற்கு கடற்படை தளபதி சைனிக் பள்ளி நிர்வாக குழு தலைவர் வைஸ் அட்மிரல் சீனிவாஸ் தலைமை வகித்தார். கூட்டத்தில் பள்ளியில் மேம்படுத்த வேண்டிய வசதிகள் தற்போது உள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி மாவட்ட அளவில் நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் ஜூலை 9ஆம் தேதி நடைபெற உள்ளதால் மாணவர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 76 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 2023-24ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முகாம் நடைபெறுகிறது. தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பாலிடெக்னிக் சேர்வதற்கு வசதியாக நாளை காலை 10 மணிக்கு முகாம் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. வரும் நாள்களிலும் திருப்பூர் மாவட்டத்தில் மழை தொடரும் என எதிர்பார்க்கலாம்.

திருப்பூர் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை, காவல் துறை, ஊராட்சி அமைப்புகளுடன் இணைந்து குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையை தடுக்கும் வகையில் நேற்று ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் 14 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.3.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக புகார்களை பொதுமக்கள் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தனர்.

தமிழகத்தில் திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் வெள்ளம்போல் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்படும். வெளியே செல்வோர் குடை, ரெயின்கோட் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கலெக்டர் கிறிஸ்தவராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 200, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாயும், மாற்றுத்திறனாளிகளுக்கு 600 ரூபாயும் வழங்கப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பித்து 5 வருடங்களுக்கு பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் இன்று (ஜூன் 26) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் கால்நடை மருத்துவர் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திருப்பூர் மத்திய பஸ் நிலையம் எதிரே உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கு நாளை காலை 10 மணிக்கு வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. எனவே இந்த பயிற்சியினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.