India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சுப்பராயன் மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தல் தயாரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக திருப்பூர் ராஜாராம் வீதியில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான செல்வராஜ் தலைமையில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
திருப்பூர் அடுத்து முத்தூர் ஈரோடு சாலை ரவுண்டானா அருகில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான காலி இடத்தில் மயானம் மற்றும் குப்பை கிடங்கு உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எறிய தொடங்கியது. இந்த தீ கோடை வெயில் உக்கிர தாக்கத்தினால் மளமளவென்று கொட்டிக் கிடந்த காய்ந்த குப்பைகள் முழுவதும் வேகமாக பரவி தீ விபத்து ஏற்பட்டது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, திருப்பூரில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாட்சி மக்களவை தொகுதி வேட்பாளராக கே. ஈஸ்வரசாமி அவர்களை திமுக அறிவித்தது. இந்தநிலையில், பொள்ளாட்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் சு.முத்துச்சாமி, அர.சங்கரபாணி மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்.கழல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராக அருணாச்சலம் அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இன்று திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்டார் தேமுதிக நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகள் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் உள்ளன. இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பெஞ்சமின் கிருபாகரன் போட்டியிடுவார் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேயம் தாலுகா பரஞ்சேரி வழி காந்தி நகரை சேர்ந்தவர் முருகேசன், கூலித் தொழிலாளி. இவர் காங்கேயம் ஈரோடு சாலையில் முள்ளிபுரம் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது மூணாறை சேர்ந்த சுப்பிரமணியன் ஓட்டிவந்த லாரி முருகேசன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.
கடந்த ஒன்றாம் தேதி தொடங்கிய பிளஸ் 2 மாணவர்களின் பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் தமிழ் எளிமையாகவும், ஆங்கில பாடம் சற்று கடினமாகவும், கணினி அறிவியல் எளிமையாகவும் வேதியல் சற்று கடினமாகவும், இயற்பியல் மிக மிக கடினமாகவும், கணிதம் சற்று கடினமாகவும் உயிரியல் எளிமையாகவும் இருந்ததாக மாணவர்கள் கூறுகின்றனர். பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் மாணவர்கள் தங்களது அளவற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
காங்கேயம் பகுதிக்கு உட்பட்ட திருப்பூர் சாலை காந்தி நகரில் வசித்து வருபவர் வெங்கடாசலம். இவர் காங்கேயத்தில் உள்ள ஒரு கம்பெனியில் சாக்கு தைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில், இவர் நேற்று மாலை மருந்து வாங்க சென்றபோது எதிர்பாராத விதமாக லாரியின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் மக்களவைத் தொகுதியின் தே.ஜ. கூட்டணியில் பாஜக வேட்பாளராக ஏ.பி.முருகானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகத்தில் பாஜக நேற்று 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.