India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து சமயத்தைப் பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு <

திருப்பூர் காமநாயக்கன்பாளையம் அருகே நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த சித்ரா என்ற பெண் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அப்போது பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்த நடிகர் ரஞ்சித் இந்த விபத்தை பார்த்துள்ளார். உடனடியாக காரில் இருந்து இறங்கி பெண்ணுக்கு தண்ணீர் கொடுத்து அவரை பத்திரமாக வழியனுப்பி வைத்தார்.

தாராபுரம் சட்டமன்ற தொகுதி, குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சூரியநல்லூர், கொழுமங்குளி, ஜோதியம்பட்டி, கெத்தல்ரேவ் மற்றும் சிறுகிணர் ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாம் நேற்று நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், குண்டடம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சந்திரசேகரன் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய விருது ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றது. இதற்கு தகுதியான திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் national.awardstoteachers.education.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்துவந்தது. மாநகரின் சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அதிகபட்சமாக 51 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 178 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 40 வயதுக்கட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் ஒன்றியங்களுக்குட்பட்ட பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லத் திட்ட வீடுகள், பழுதுபார்த்தல் திட்ட பணிகளுக்கு ஆணைகளை செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் வழங்கினார். திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர், பொள்ளாச்சி எம்பி உடன் இருந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் ஒன்றியங்கள் உட்பட்ட பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லத் திட்ட வீடுகள், பழுதுபார்த்தல் திட்ட பணிகளுக்கு ஆணைகளை செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் வழங்கினார். திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொள்ளாச்சி எம்பி கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிச்சிக்கோட்டை ஊராட்சிகள் இன்று கல்வித்துறை சார்பில் இடை நிலை கல்வி ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முறையில் கையடக்க கணினிகளை அமைச்சர் சாமிநாதன் இன்று வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் மற்றும் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.