Tiruppur

News July 20, 2024

வண்டல் மண் எடுப்பதில் குளறுபடி: ஆட்சியருக்கு மனு

image

உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க ஆட்சியர் உத்தரவின்படி வட்டாட்சியர் மூலம் அனுமதி பெற்று தற்போது விவசாயிகள் வண்டல் மண் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் க.ச. எண் 264-க்கு மட்டும் விண்ணப்பித்த விவசாயிகள் சிலருக்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில் அனுமதித்த அளவு முடிந்து விட்டதாக இணையதளத்தில் காட்டுவதால் உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் ஆட்சியருக்கு இன்று மனு அனுப்பி உள்ளனர்.

News July 20, 2024

நாளை கோவை-தனப்பூர் சிறப்பு ரயில் இயக்கம்

image

வடமாநில தொழிலாளர்களின் வசதிக்காக கோவை-பீகார் மாநிலம் தனப்பூர் சிறப்பு ரயில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன்படி நாளை (ஜூலை 21) இரவு 11.30 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு வரும் 24ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் தனப்பூர் செல்கிறது. இந்த ரயிலில் படுக்கை வசதிகள் கொண்ட 15 பெட்டிகள் உள்ளன. ஜூலை 22ஆம் தேதி நள்ளிரவு 12.10 மணிக்கு திருப்பூர் சென்றடையும்.

News July 19, 2024

உடுமலை வழியாக திருச்செந்தூர் செல்வோர் கவனத்திற்கு

image

உடுமலை வழியாக மேட்டுப்பாளையம் தூத்துக்குடி வரை வாரம் இருமுறை இன்று முதல் விரைவு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மேட்டுப்பாளையத்தில் வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 7:35 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சி வழியாக உடுமலைக்கு இரவு 10 மணிக்கு வரும். அதேபோல, தூத்துக்குடியில் இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3:30 மணி அளவில் உடுமலை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 19, 2024

நாளை ரேஷன் கடைகள் இயங்காது

image

மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (ஜூலை 20) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் திருப்பூர் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.

News July 18, 2024

கலைஞர் கனவு திட்ட பயனாளிக்கு நாளை ஆணை வழங்கல்

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் – தாராபுரம் சாலையில் உள்ள மீனாட்சி மகாலில், காங்கேயம், வெள்ளகோவில் மற்றும் குண்டடம் கிழக்கு ஒன்றியங்களை சேர்ந்த கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் விழா நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் தலைமையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் இன்று அழைப்பு விடுத்துள்ளது.

News July 18, 2024

மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்த எம்.பி.

image

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட கொழுமத்தில் உள்ள திருக்குமரன் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே ஈஸ்வர சாமி, முன்னாள் எம்.எல்.ஏ ஜெயராமகிருஷ்ணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இதில் அரசுத்துறை சார்ந்த பல்வேறு சேவைகளை பெரும் வகையில் வழிவகை செய்யப்பட்டது. மேலும் பொது மக்களிடம் இருந்து துறைவாரியாக மனுக்களும் பெறப்பட்டது.

News July 18, 2024

TNPSC: நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்

image

TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 18, 2024

தேசிய அளவில் திருப்பூர் அரசுப் பள்ளி மாணவி தேர்வு

image

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியின் குரூப்-1 பிரிவில் திருப்பூர் குமார் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி அர்ச்சனா பங்கேற்றார். இதில் 50 மீ பேக்ஸ்ட்ரோக் பிரிவில் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இதனால் புவனேஸ்வரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணியின் சார்பில் விளையாட அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News July 17, 2024

திருப்பூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழை

image

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 17, 2024

திருப்பூரில் 19ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 19ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலை தேடும் இளைஞர்கள் ஆட்சியில் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் உடன் கலந்து கொள்ளலாம். மேலும் வேலை தேடுபவர்கள் www.tnprivatejobs.tn gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!