India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் நாச்சிபாளையம் ஜி.என்.கார்டன் பகுதியில் குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் – காங்கேயம் பிரதான சாலையில் அமர்ந்து இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அவிநாசிபாளையம் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திருப்பூர்-சேலம் இடையேயான TNPL போட்டி, நேற்று நெல்லையில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி, அதிரடியாக விளையாடியது. இதனால், 20 ஓவர்கள் முடிவில் 192 ரன்கள் எடுத்தது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேலம் அணி, 141 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. திருப்பூர் அணி சார்பாக, துஷார் 79 ரன்களும், குரு 3 விக்கெட்டுகள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்து கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் எனும் வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே இந்து முன்னணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் கலந்து கொண்டு கண்டன கோசங்கள் எழுப்பினார்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை அதிகபட்சமாக 6 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதாலும், வானம் மேகங்கள் இன்றி தெளிவாக உள்ளதாலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அருவிக்கு செல்ல
இன்று அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபடுவார்கள் என திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் எஸ்.பி அலுவலகத்தில் சட்ட ஆலோசகர் பணிக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியாமாக இளங்கலை சட்டப்படிப்பு அல்லது ஒருங்கிணைந்த 5 ஆண்டுகள் சட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இதற்கு தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்த்திருக்க வேண்டும்.தகுதி உடையவர்கள் வேலை நாட்களில் காலை 10 முதல் மதியம் 2 மணிக்கு எஸ்.பி அலுவலகத்திர்கு நேரில் வந்து விண்ணபிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம்
உடுமலை எலையமுத்தூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், 9 ,10, 11, 12 ஆம் வகுப்பில் தவறியவர்களும் விண்ணப்பித்து தொழிற்கல்வி பெற வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு கல்வி கட்டணம் முற்றிலும் இலவசம். மேலும் அனைவருக்கும் மாதாந்திர தொகை ரூ.750 வழங்கபடும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

தாராபுரம் அடுத்துள்ள குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தவனம்பாளையம் , கொக்கம்பாளையம், முத்தியம்பட்டி , பெல்லம்பட்டி ஊராட்சிகளுக்கு உட்பட்டகிராமங்களுக்கான “மக்களுடன் முதல்வர்” முகாம் இன்று நடைபெற்றது. இந்த திட்ட முகாமை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். இதில் மாவட்ட செயலாளர் பத்மநாபன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

உடுமலை பேருந்து நிலையத்துக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில் பழனி பேருந்துகள் இருக்கும் இடத்தில் மதுப்பிரியர் ஒருவர் நேற்று மாலை சுமார் 20 நிமிடத்திற்கு மேல் அப்பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபட்டார். இதில் டயர்டு ஆன மதுப்பிரியர் பேருந்து நிலையத்தில் படுத்து உறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து காவலர் தண்ணீரை ஊற்றி அவரை அப்புறப்படுத்தினர்.
Sorry, no posts matched your criteria.