Tiruppur

News July 25, 2024

மரணத்திடம் தோற்று, மனங்களை வென்ற டிரைவர்

image

திருப்பூர், வெள்ளகோவில் கே.பி.சி நகரை சேர்ந்தவர் சேமலையப்பன் (48), தனியார் பள்ளி ஓட்டுநரான இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. வேனில் பள்ளி குழந்தைகள் 20 பேர் இருப்பதை உணர்ந்த சேமலையப்பன் சாலை ஓரம் வாகனத்தை நிறுத்தி விட்டு, ஓட்டுநர் இருக்கையிலே உயிரிழந்தார். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

News July 25, 2024

பெண் தையல் தொழிலாளர்களுக்கு அழைப்பு

image

திருப்பூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் பல்லடம் பெண்கள் எழுதுபொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் தையல் தொழிலாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கத்தில் இணை உறுப்பினர்களை சேர்ப்பதற்கு தகுதியானவர்களை விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் வரும் 31 ஆம் தேதிக்குள் பல்லடம் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 25, 2024

‘ஷீடு’ திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மூலம் சீர் மரப்பினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு ஷீடு திட்டம் மைய அரசால் கல்விக்கான அதிகாரமளித்தல், சுகாதாரம், வாழ்வாதாரங்களை எளிதாக்குதல், நிலம் மற்றும் வீடு வழங்குதல் ஆகிய திட்டங்கள் உள்ளன. தகுதி உள்ள பயனாளிகள் மத்திய அரசின் இணையத்தளமான www.dwbdnc.dosje.gov.in வாயிலாக விண்ணப்பிக்ககாலம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 25, 2024

திருப்பூரில் 41 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

image

கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்போர், தயாரிப்போர் என நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வரும் 41 பேரின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாக தமிழ்நாடு வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஷ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

News July 25, 2024

பல்லடம் காவல் ஆய்வாளருக்கு SP பாராட்டு

image

தமிழக அரசு சார்பில் சட்டம் ஒழுங்கு பராமரித்தல், குற்றங்களை தடுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக ஆண்டுதோறும் சிறந்த காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக பல்லடம் காவல் நிலையம் கடந்த 23 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட SP நேற்று காவல் ஆய்வாளரை நேரில் அழைத்து பாராட்டினார்.

News July 25, 2024

TNPL: திருப்பூர் அணி த்ரில் வெற்றி

image

திருப்பூர் – நெல்லை இடையேயான TNPL போட்டி நேற்று நெல்லையில் நடைபெற்றது. முதலில் ஆடிய திருப்பூர் அணி, அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நெல்லை அணி, தொடக்கத்தில் தடுமாறினாலும் மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 184/9 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. நடராஜனின் அபார பந்துவீச்சில் திருப்பூர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News July 25, 2024

பல்லடம் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு

image

ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் சட்டம் ஒழுங்கு பராமரித்தல், குற்றங்களை தடுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக சிறந்த காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அந்த வகையில் 2022ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக பல்லடம் காவல் நிலையம் கடந்த 23ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசோதனை வழங்கப்பட்டது. மாவட்ட எஸ்.பி இன்று காவல் ஆய்வாளரை நேரில் அழைத்து பாராட்டினார்.

News July 24, 2024

திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் திருப்பூர் மாநகர பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு மேற்கொள்ளப்பட்டு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் முடிக்க வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

News July 24, 2024

வெளிநாட்டு தொழில் முனைவோர்கள் திருப்பூரில் ஆய்வு

image

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள புர்கினோ பாசோ என்கிற நாட்டிலிருந்து 14 நபர்கள் அடங்கிய தொழில் முனைவோர்கள் கொண்ட குழு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்திற்கு இன்று வருகை தந்திருந்தனர். தொடர்ந்து திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள் தொழில் திறன், மனித வளம் மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

News July 24, 2024

வங்கிக் கிளையை முற்றுகை இட வந்த விவசாயிகள்

image

திருப்பூர், உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி வங்கியில் பெற்ற விவசாய கடனை வட்டி மற்றும் அசல் உடன் செலுத்தி ஓராண்டு காலம் ஆகியும், இன்னும கடனை ரத்து செய்யாமலும் பத்திரங்களை வழங்காமல் இருந்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கனரா வங்கி கிளையை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் இன்று முற்றுகை இட்டனர்.

error: Content is protected !!