Tiruppur

News July 27, 2024

திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

image

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டை தமிழகத்தைச் சார்ந்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி தொகுதி எம்பி ஈஸ்வரசாமி தலைமை வகித்தார். இதில் ஏராளமான பேர் கலந்துகொண்டனர்.

News July 27, 2024

மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

image

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: -தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வரும் 29.07.2024 அன்று சூரியம்பாளையத்தில் உள்ள கல்லூரிபகுதியில் மாற்றுப் பணிகள் நடைபெறவுள்ளதால் 29ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை 12 மணி நேரம் மின்தடை ஏற்படவுள்ளது. இதனால், அன்று கால நீர் விநியோகம் தடைபடும் என தெரிவித்துள்ளார்.

News July 27, 2024

ஒலிம்பிக் வளையம் அமைத்து வாழ்த்து

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024 ஆம் ஆண்டு பாரிசு ஒலிம்பிக்கில் இந்திய சிறப்பான முறையில் பதங்களை பெறுவதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒலிம்பிக் வளையங்கள் கொண்ட அமைப்பை மாணவ, மாணவிகள் இன்று உருவாக்கினர். தலைமையாசிரியர் செந்தில் குமார் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

News July 27, 2024

திருப்பூர் இரயில் நிலையம் முன்பு திமுகவினர் ஆர்பாட்டம்

image

திருப்பூர் மாவட்ட இரயில் நிலையம் முன்பு மத்திய அரசின் நிதி நிலை பட்ஜெட்டை கண்டித்து திமுக வடக்கு மாவட்டம் சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வர சாமி, சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய நிதி நிலை அறிக்கையை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தினர்.

News July 26, 2024

மருத்துவ முகாமை துவக்கி வைத்த அமைச்சர்

image

தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நஞ்சையும் பாளையம் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைஞரின் “வருமுன் காப்போம்” இலவச சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. முகாமில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

News July 26, 2024

காதில் பூ சுற்றி ஆர்ப்பாட்டம்

image

மத்திய அரசு வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில், தமிழகம் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மத்திய அரசுக்கு எதிராக காதில் பூச்சுற்றியும் பட்டை நாமம் அணிந்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News July 26, 2024

திருச்சியை வெல்லுமா திருப்பூர்

image

திருச்சி-திருப்பூர் அணிகளுக்கு இடையேயான TNPL போட்டி நாளை இரவு 7.15 மணிக்கு திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது. புள்ளிப் பட்டியலில், திருச்சி-3, திருப்பூர்-4 என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. வரும் 30ஆம் தேதியுடன் லீக் போட்டிகள் நிறைவடைய உள்ளதால், போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. யார் வெற்றி பெறுவார்?

News July 26, 2024

ரூ.5 லட்சம் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்

image

பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றி, தன்னுயிர் நீத்த திருப்பூரை சேர்ந்தவரின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் அறிவித்துள்ளார். வெள்ளக்கோயிலை சேர்ந்த சேமலையப்பன், தனியார் பள்ளிப் பேருந்து டிரைவர். இவர், வேனில்(ஜூலை 24) 20க்கும் மேற்பட்ட குழந்தைகளோடு சென்றபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வலியில் துடித்த நிலையிலும், போராடி வேனை பாதுகாப்பாக நிறுத்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

News July 25, 2024

குழந்தைகள் உயிரை காத்த டிரைவர்: முதல்வர் இரங்கல்

image

திருப்பூரில் பள்ளி வாகனம் ஓட்டும் போது மலையப்பனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அப்போது, வேனில் இருந்த குழந்தைகளை மீட்க சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு உயிரிழந்தார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலில் தனது X தளத்தில், இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த மலையப்பன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார் என பதிவிட்டுள்ளார்.

News July 25, 2024

தேமுதிக-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

image

உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக திருப்பூர் மாநகரம் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் குழந்தைவேல் தலைமையில் நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர்.

error: Content is protected !!