India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்டத்தில் ஆயுஸ் & தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள 36 பணியிடங்களை மாவட்ட நலச் சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணபிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 9 ஆம் தேதி. கூடுதல் விவரங்களுக்கு இங்கு <

சிக்குபுகாய் ஓபன் சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வீரர் ஸ்ரீராம் ரத்தினத்தை சந்தித்து, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி மற்றும் முத்தம்மாள் அறக்கட்டளை சார்பாக திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய ஓபன் ஒற்றையர் கேரம் போட்டி இன்று தொடங்கியது. இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டியினை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சத்யா நகரைச் சேர்ந்தவர் சேமலையப்பன் (49). தனியார் பள்ளி வேன் ஓட்டுநராக இருந்த இவர், கடந்த 24ஆம் தேதி வேன் ஓட்டும் போது மாரடைப்பால் உயிரிழந்தார். இறப்பதற்கு முன் பள்ளி குழந்தைகளை காப்பாற்றும் விதமாக வேனை சாலை ஓரமாக நிறுத்தி காப்பாற்றினார். இன்று ஈரோடு தொகுதி எம்.பி. பிரகாஷ் சேமலையப்பன் இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்.

ஆயுஷ் மற்றும் தேசிய சுகாதார மிஷன் கீழ் இயங்கும் பல்வேறு அரசு துறை சுகாதார நிலையங்களில் உள்ள /காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், பல் அறுவை சிகிச்சை நிபுணர், பல் உதவியாளர், டிரைவர், மருந்தாளர், சித்தா மருத்துவர், பல்நோக்கு பணியாளர் உள்ளிட்ட 31 பணியிடங்கள் உள்ளன. இதற்கு ரூ.13,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே <

திருப்பூரில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் அனைவரும், உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அரசின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை கல்லூரிக்கு விண்ணப்பிக்காத தாய், தந்தை இல்லாத மாணவர்களுக்கு இன்று 2ஆம் கட்டமாக ஆட்சியர் அலுவலகத்தில் முகாம் நடைபெறுகிறது. இதில், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிதி வழங்க ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான புகார்களை தெரிவிக்க எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு 1800 599 5950 சென்று கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். மேலும், திருப்பூர் மாவட்ட காவல் ஆய்வாளர் 94981 04500, ஆய்வாளர் 94981 26706 என்ற எண்களின் தொடர்பு கொள்ள அறிவிக்கபட்டுள்ளது.

திருச்சி – திருப்பூர் இடையேயான TNPL போட்டி நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. முதலில் ஆடிய திருப்பூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மான் பாப்னா 50 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி, 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் திருப்பூர் அணி 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டி தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Sorry, no posts matched your criteria.