Tiruppur

News July 31, 2024

வெற்றியை நழுவ விட்ட திருப்பூர் அணி

image

TNPLஇல் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் போட்டியில் கோவை அணியிடம் வெற்றிவாய்ப்பை பறிகொடுத்தது திருப்பூர் அணி. திருப்பூர் அணி 201 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த இலக்கை துரத்திய கோவை அணியின் சாய் சுதர்சன் (123*), முகிலேஷ் (48*) ரன்கள் அடித்தனர். இதையடுத்து 18.5 ஓவரில் இலக்கை எட்டி கோவை அணி அபார வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டி ஆக.4இல் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

News July 30, 2024

திருமூர்த்தி அணையில் வெளுத்து வாங்கிய கனமழை

image

திருப்பூர், உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணை நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை உட்பட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்திற்கு அணைப்பகுதியில் 18 மி.மீட்டரும், நல்லாறு பகுதியில்
50 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள
செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News July 30, 2024

நீங்களும் இனி ரிப்போர்ட்டர் தான்

image

தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், திருப்பூர் மாவட்டத்தில் உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்ச்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல், ஆன்மிகம் உள்ளிட்ட நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். செய்திகளை உடனுக்குடன் பதிவிட்டு வருவாய் ஈட்டலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 96424-22022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

News July 30, 2024

திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் 3ம் தேதி தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.

News July 30, 2024

TNPL: கோவையை வீழ்த்துமா திருப்பூர்?

image

கோவை – திருப்பூர் இடையேயான TNPL ப்ளே-ஆஃப் போட்டி இன்றிரவு 7.15 மணிக்கு திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது. 2 பலம்வாய்ந்த அணிகள் மோதவுள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் வெற்றிபெறும் அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி எலிமினேட்டர் சுற்றுக்கு செல்லும். ஒரேயொரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்த கோவையை திருப்பூர் அணி வீழ்த்துமா? என கமெண்டில் சொல்லுங்க.

News July 30, 2024

திருப்பூரில் மாத சம்பளம் ரூ.40,000: முந்துங்க!

image

திருப்பூர் மாவட்ட சுகாதார நலத்துறையின் பல்வேறு பிரிவுகளில் 36 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 26ஆம் தேதி விண்ணப்பம் தொடங்கிய நிலையில், விண்ணப்பிக்க ஆக. 9 கடைசி நாளாகும். கல்வித் தகுதி: 8th, 10th, 12th, Diploma, B.Sc., BDS. மாதச் சம்பளம் ரூ.40,000 வரை. விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க: https://tiruppur.nic.in/ உடனே முந்துங்க மக்களே!

News July 29, 2024

திருப்பூர் மாவட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் பரிந்துரை

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இன்று வந்திருந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இலவச வீட்டுமனை பட்டா, சாலை வசதி, சாக்கடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 575 மனுக்களை வழங்கினர். இதனைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் மனுதாரர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பரிந்துரை செய்தார்.

News July 29, 2024

ராமலிங்கம் கொலை வழக்கு: சன்மானம் அறிவிப்பு

image

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கை விசாரித்துவரும் என்ஐஏ, வழக்கில் தொடர்புடைய 5 பேர் குறித்த தகவல் தெரிவித்தால் ஒரு நபருக்கான தகவலுக்கு ரூ.5 லட்சம் வீதம், 25 லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என்று திருப்பூரில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது. தகவல் தெரிவிப்பவர் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். தொடர்பு கொள்ள மொபைல் எண்: 94999 45100, 9962361122); மின்னஞ்சல்: infoche.niagov.in எனவும் அறிவித்துள்ளது.

News July 29, 2024

திருப்பூரில் இடியுடன் கனமழை

image

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கும் எனவும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News July 29, 2024

ரேக்ளா பந்தயத்தை துவக்கி வைத்த அமைச்சர்கள்

image

தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பேரூர் கழக திமுக சார்பில் முதலாம் ஆண்டு ரேக்ளா பந்தயம் நேற்று நடைபெற்றது. இந்த பந்தயத்தை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்தனர். இதில் 400-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி வீரர்கள் கலந்துகொண்டு பரிசுகளை வென்றனர்.

error: Content is protected !!