Tiruppur

News August 2, 2024

புதிய நிலக்கடலை ரகம் அறிமுகம்

image

திருப்பூர் மாவட்டத்தில் புதியதாக நிலக்கடலையை வேளாண்மை துறையினர் அறிமுகம் செய்துள்ளனர். மத்திய அரசின் தேசிய விதை கழகம் ஜெ.ஜெ-32 என்ற புதிய ரக நிலக்கடலை ரக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரக விதையின் வாயிலாக விளைவிக்கப்படும் நிலக்கடலையில் 90 காய்கள் பிடிக்கும். முதல் கட்டமாக திருப்பூர், அவிநாசி பகுதி கீழ் உள்ள விவசாயிகளுக்கு இந்த புதிய ரக நில கடலை தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

News August 1, 2024

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய அமைச்சர் 

image

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பிசப் உபகாரசாமி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு 847 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். 

News August 1, 2024

புதிய நிலக்கடலை ரகம் அறிமுகம்

image

திருப்பூர் மாவட்டத்தில் புதியதாக நிலக்கடலையை வேளாண்மை துறையினர் அறிமுகம் செய்துள்ளனர். மத்திய அரசின் தேசிய விதை கழகம் ஜெ.ஜெ-32 என்ற புதிய ரக நிலக்கடலை ரக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரக விதையின் வாயிலாக விளைவிக்கப்படும் நிலக்கடலையில் 90 காய்கள் பிடிக்கும். முதல் கட்டமாக திருப்பூர், அவிநாசி பகுதி கீழ் உள்ள விவசாயிகளுக்கு இந்த புதிய ரக நில கடலை தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

News August 1, 2024

திருப்பூரில் இன்றைய முக்கிய செய்திகள்

image

➤பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ➤திருப்பூரில் உள்ள கழிவறைக்கு உட்பட்ட அறையில் வடமாநில வாலிபர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தது குறித்த வீடியோ வைரல். ➤11ஆம் வகுப்பிற்கு சேர்க்க மறுப்பு மாணவி கலெக்டரிடம் மனு. ➤அமராவதியில் 14ஆவது நாளாக உபரிநீர் வெளியேற்றம். ➤விளையாட்டு மைதானம் அமைத்து தருமாறு சங்கராநல்லூர் பேரூராட்சி சார்பில், அமைச்சர் உதயநிதியிடம் மனு அளித்தனர்.

News August 1, 2024

பள்ளியில் சேர்க்க மறுப்பு: கலெக்டரிடம் மனு

image

திருப்பூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி அருகில் உள்ள தனியார் பள்ளியில் கல்வி பயின்று வருகிறார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், துணை தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும் பள்ளி நிர்வாகம் தன்னை பள்ளியில் 11ஆம் வகுப்பில் சேர அட்மிஷனுக்கு மறுப்பதாக தெரிவித்து கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.

News August 1, 2024

உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை

image

திருப்பூர், மடத்துக்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட சங்கராநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா கருப்புசாமி துணைத்தலைவர் பிரேமலதா உத்தமராஜ் ஆகியோர் இன்று திருச்சி விமான நிலையத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து சங்கரமநல்லூர் பேரூராட்சிக்கு பட்ட பகுதியில் நவீன விளையாட்டு மைதானம் அமைத்து தருமாறு மனு அளித்தனர். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

News August 1, 2024

பெட்ரோல் ஊற்றி மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது

image

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் அவரது மனைவி மகாலட்சுமி. இவர்கள் கடந்த இரண்டு வருடமாக திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஆறு மாத காலமாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மகாலட்சுமி வீட்டிற்குச் சென்ற ராமச்சந்திரன் வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். புகாரின்பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிந்து ராமச்சந்திரனை கைது செய்தனர்.

News August 1, 2024

திருப்பூரில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

image

திருப்பூரில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், UYEGP என்ற திட்டம் செயல்படுத்தப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் திட்ட முதலீட்டில் ரூ.3.75 லட்சம் மானியத்துடன் வழங்கப்படுகிறது என கலெக்டர் அறிவித்துள்ளார். வயது வரம்பு: பொதுப்பிரிவு 45, சிறப்பு பிரிவு 55. தேர்ச்சி: 8ம் வகுப்பு. விண்ணப்பிக்க: www.msmeonline.tn.gov.in/uyegp

News August 1, 2024

மகளிர் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனை

image

திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவ ஆட்சி தலைமையில் மகளிர் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட நிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் தடையில்லாமல் மக்களுக்குச் சென்றடைய கூடிய வகையில் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

News July 31, 2024

காவலர்களை பாராட்டிய மேற்கு மண்டல ஐஜி

image

திருப்பூர் திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மாபாளையம் அருகே நேற்றைய தினம் வங்கி ஊழியர் கார்த்திகா என்பவர் அணிந்திருந்த 2 பவுன் தாலிச் சங்கிலி வழிப்பறி செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் சபரிநாதன் மற்றும் செந்தில்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவலர்களை மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி நேரில் பாராட்டினார்.

error: Content is protected !!