India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உடுமலை அருகே வேடப்பட்டி பகுதி வழியாக பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று அதிகாலை உடுமலை செல்லும் வழித்தடத்தில் வேகத்தடை இல்லாத காரணத்தால் சாலையின் நடுவே உள்ள தடுப்பில் அரசு பேருந்து மோதியதில் ஒரு சில பேர் காயம் அடைந்தனர். எனவே இந்த பகுதியில் முறையான அறிவிப்பு பலகை வேகத்தடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திருப்பூர், கோவை, திருவாரூர், தஞ்சாவூர், தேனி, தென்காசி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் படியூர் கிராமத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் 26 குடும்பங்கள் வீட்டுமனைகளை வாங்கி வசித்து வருகின்றனர். கடந்த 4 வருடங்களாக தவணைத் தொகை செலுத்தி வரக்கூடிய நிலையில், சாலை வசதி தண்ணீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை எனவும், அடிப்படை வசதிகளை செய்து தர ரியல் எஸ்டேட் நிறுவனத்தை வலியுறுத்த வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியைச் சேர்ந்தவர் வேல் (60). இவர் பொங்கலூர் அருகே உள்ள பொன்நகரில் தனது மகனுடன் வசித்துவருகிறார். இவர் பல்வேறு கிராமங்களுக்கு சென்று பழங்களை வண்டியில் வைத்து வியாபாரம் செய்துவருகிறார். பழ வியாபாரி வேலை மர்ம நபர்கள் குத்திக்கொலை செய்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரைச் சேர்ந்தவர் செவடமுத்து. சொந்தமாக வேன் வைத்து வாடகைக்கு ஓட்டிவருகிறார். ஊத்துக்குளியிலிருந்து நூல் மில்லுக்கு தேவைப்படும் கழிவு பஞ்சு பேல்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்றது. வேனை திருவாரூரைச் சேர்ந்த மோகன் என்பவர் ஓட்டிவந்தார். வெள்ளகோவில் காமநாயக்கன்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது மின் கம்பியில் உரசி எதிர்பாராதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து சேதமானது.
திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் எல்.ஆர்.ஜி மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பவானி மற்றும் அந்தியூர் பகுதி கண்காணிப்பு கேமரா செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள பிரசித்திப்பெற்ற அவினாசிலிங்கேஸ்வரர் கோயிலில் சித்திரை தேரோட்டம் இன்று(ஏப்.21) காலை தொடங்கி 3 நாள் நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக அவிநாசி மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விடுமுறையை ஒட்டி கூட்டம் அதிகமாகும் என்பதால் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள
கோவையிலிருந்து பீஹார் மாநிலம், பாருணிக்கு , வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல்.23) சிறப்பு ரயில் (06059) இயக்கபடவுள்ளது. இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக இயக்கப்படுகிறது. அதன்படி, கோவையிலிருந்து (ஏப்ரல்.23) காலை 11.50 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் (ஏப்ரல்.24) மதியம் 2.30 மணிக்கு பாருணி சென்றடையும்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு நேற்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்து வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலை கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட அறைக்கு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைத்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றைய தினம் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் 1745 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற நிறைவடைந்துள்ளது. ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வாக்கு என்னும் மையமான எல் ஆர் ஜி அரசு மகளிர் கலை கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டு வைப்பறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.