Tiruppur

News August 4, 2024

எதிர்ப்பார்ப்பில் கொங்கு மண்டலம்

image

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் 70 ஆண்டு கால கோரிக்கை அத்திக்கடவு-அவிநாசி திட்டம். அதிமுக ஆட்சியில் ரூ.1,652 கோடியில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 1,045 குளங்களும், 24,468 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும். ஆனால், தற்போது வரை இத்திட்டம் 93% பணிகள் மட்டுமே முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இத்திட்டம் எப்போது முழுமை பெறும் என கொங்கு மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

News August 4, 2024

மாணவர்களுக்கு திறனாய்வுப் தேர்வுகள்

image

தமிழ்நாடு முதலமைச்சரின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான திறனாய்வு தேர்வுகள் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்றது. அரசு பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு கல்வி கற்கும் மாணவ, மாணவியர்களுக்கு இத்தேர்வு நடத்தப்பட்டது. திருப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வினை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார்.

News August 4, 2024

பருப்பு, பாமாயில் இம்மாதம் வழங்கப்படும்

image

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, திருப்பூரில் உள்ள 7,95,88 ரேஷன் அட்டை தாரர்கள் ஜூலை மாதத்துக்கான பொருட்களை இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம்.

News August 4, 2024

நட்புனா என்னான்னு தெரியுமா?

image

இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், திருப்பூர் நண்பர்களே நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.

News August 4, 2024

இலவச தையல் பயிற்சி

image

திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் திறன்மிகு தொழிலாளர்களை பணி அமர்த்தும் வகையில் ஆடை உற்பத்தி சார்ந்த பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக வரும் 18ம் தேதி முதல் இலவச தையல் பயிற்சிகளும், 2ம் கட்ட பேட்டர்ன் மேக்கிங் பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு 95979-14182 என்ற எண்ணை தொர்பு கொள்ளலாம்.

News August 3, 2024

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு 

image

பெருமழையின் காரணமாக கேரள மாநிலம் வயநாடு பகுதி மிகப்பெரும் சேதம் அடைந்துள்ளது. அங்கு ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக இரண்டுக்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்களுக்கு உதவிடும் வகையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை அமைச்சர் சாமிநாதன் இன்று கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார்.

News August 3, 2024

ரயில்வே போலீசாருக்கு பாராட்டு

image

பெங்களூரிலிருந்து கோவை நோக்கிச் சென்ற குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஜூன் 16ஆம் தேதி பயணம் செய்த கோவையைச் சேர்ந்த சுபாஷ் என்ற நகை வியாபாரியிடம் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக திருப்பூர் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்து பணம் மற்றும் நகைகளை மீட்டனர். இதற்காக தமிழக டிஜிபி இன்று நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.

News August 3, 2024

குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

image

திருப்பூர், போயம்பாளையம் அருகே மும்மூர்த்தி நகர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் இன்று காலை தீ எரிய தொடங்கியுள்ளது. சிறிது நேரத்தில் தீ மள மளவென குப்பை கிடங்கு முழுவதும் எரிய தொடங்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட புகை மண்டலம் குடியிருப்பு பகுதிகளையும் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகப்பெரும் அவதிக்குள்ளாகினர். இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

News August 3, 2024

தீரன் சின்னமலை படத்திற்கு அமைச்சர் மரியாதை

image

தாராபுரத்தில் தீரன் சின்னமலையின் 219ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு தாராபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அலுவலகத்தில் தீரன் சின்னமலை யின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

News August 3, 2024

அமைச்சர் சாமிநாதன் இபிஎஸ்ஸுக்கு பதிலடி

image

உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் காலதாமதம் என எடப்பாடி பழனிசாமி
நேற்று அறிக்கை விடுத்து இருந்தார். இதற்கு அமைச்சர் சாமிநாதன் இன்று விடுத்து உள்ள அறிக்கையில், அணையின் முக்கிய நீர்வரத்தான காண்டூர் கால்வாய் பாரமரிப்பு பணிகள்
தீவிரமாக நடைபெறும். பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பது வேடிக்கையானது என தெரிவித்தார்.

error: Content is protected !!