Tiruppur

News April 28, 2024

\கஞ்சா வைத்திருந்த பெண் கைது

image

திருப்பூர் பெருமாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொத்தம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த கவிதா என்பவரின் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 4.8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News April 27, 2024

உடுமலை: கிராம உதவியாளர் பணியிடை நீக்கம்

image

உடுமலை கணக்கம்பாளையம் விஏஓ-வாக பணியாற்றிய கருப்புசாமி கடந்த 23ஆம் தேதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய மரண வாக்குமூலம் கடிதத்தில் கிராம உதவியாளர் சித்ரா, மணியன் தான் என் சாவுக்கு காரணம் என எழுதி இருந்தார். காவல்துறையினர் தற்பொழுது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். உடுமலை வட்டாட்சியர், சித்ராவை சஸ்பெண்ட் செய்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News April 27, 2024

1.25 கோடி ரூபாய்க்கு பருத்தி ஏலம்

image

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் இன்று நடைபெற்றது. ஏலத்தில் மூலனூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 492 பேர் கலந்து கொண்டு பருத்தி விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு 8,366 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இதன் மதிப்பு சுமார் 1.25 கோடி ஆகும்.

News April 27, 2024

திருப்பூர் : வாகனங்களுக்கு அபராதம்

image

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிக பாரம் ஏற்றி வரும் மாநிலங்கள் குறித்து போக்குவரத்து காவல்துறையினர் தீவிர சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர். சாலை விபத்துக்களை தவிர்க்கவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் திருப்பூர் பல்லடம் சாலையில் போக்குவரத்து காவல்துறையினர் அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்களுக்கு இன்று அதிரடியாக அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர்.

News April 27, 2024

செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு தடுப்பூசி

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளின் உயிர்காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்கான மூன்றாம் சுற்று தடுப்பூசி போடப்படுகிறது. ஏப்ரல் 29ஆம் தேதி முதல் 30 நாட்களுக்கு தடுப்பூசி போடப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.

News April 27, 2024

கையாடல் செய்த மேலாளர் கைது

image

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் பொறுப்பாளராக ஷேக் உசேன்(38) என்பவர் அவிநாசி காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் ஆனந்தன்(29) என்பவர் தனது அலுவலகத்திலிருந்து 1.75 லட்சத்தை கையால்டல் செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். அதன் பேரில் அவிநாசி போலீசார் ஆனந்தனை கைது செய்தனர்.

News April 27, 2024

கோடைகால பயிற்சி – அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் உறைவிடம் சாரா கோடைகால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடத்தப்பட உள்ளது. சிறந்த பயிற்றுநர்களை கொண்டு தடகளம் கூடைப்பந்து ஆகிய பயிற்சிகள் வருகின்ற 29ஆம் தேதி முதல் மே மாதம் 13-ஆம் தேதி வரை திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது என திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணராஜ் நேற்று தெரிவித்துள்ளார்.

News April 27, 2024

தடுப்புச் சுவரில் மோதி 2 பேர் பலி

image

தாராபுரம் அருகே உள்ள சின்னக்காம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கூலித் தொழிலாளிகள் கார்த்திகேயன் மற்றும் வடிவேல் இருவரும் எதிர்பாராதமாக சாலை தடுப்பில் மோதி நேற்று படுகாயம் அடைந்தனர். சிகிச்சை பெற்று வந்த கூலித் தொழிலாளிகள் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 26, 2024

திருப்பூரின் அமைதியான பஞ்சலிங்க அருவி!!

image

உடுமலைப்பேட்டை அருகே திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இவ்விடம் தியானம், நீர்வீழ்ச்சி, கோவில் மற்றும் திருமூர்த்தி அணைக்கு பிரபலமானது. நவம்பர் முதல் ஜூன் மாதம் வரை அருவில் நீர் அதிகரித்து செழிப்பாக காணப்படுவதால் சுற்றுலாவிற்கு இதுவே ஏற்ற காலம். இந்த அருவி 5மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது. நெல்வயல்கள், சூரியகாந்தி தோட்டங்களுடன் அழகு செரிந்து இவ்வருவி காணப்படுகிறது.

News April 26, 2024

நிலைக்கு வந்த மாரியம்மன் கோவில் தேர்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. நேற்று மாலை 3:45 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் நேற்று இரவு 9 :30 மணி அளவில் கோவில் பகுதியை அடைந்தது .இந்த வருடம் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடியதால் 5 மணி நேரம் கழித்து தேர் நிலையை அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!