Tiruppur

News May 1, 2024

9,900 குடும்பத்தினர் புதிய ரேஷன் கார்டின்றி தவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மற்றும் பல்வேறு பகுதிகளில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு 9,900 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யாமல் தேங்கியுள்ளது. தற்போது அனைத்து தரப்பு மக்களுக்கும் ரேஷன் கார்டு இன்றியமையாததாக உள்ளது. பல்வேறு நலத்திட்டங்கள் பெறுவதற்கு கார்டு தேவைப்படுகிறது. எனவே புதிய ரேஷன் கார்டுகளை விரைந்து வழங்க பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு இன்று மனு அனுப்பி உள்ளனர்.

News May 1, 2024

வியாபாரிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள அரசு மதுபான கடை, பஸ் ஸ்டாண்ட் வணிக நிறுவனங்கள் கோவில் பள்ளியில் என மக்கள் நெரிசல் மிகுந்த பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை மே 5ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்யப்படவில்லை என்றால் 18ஆம் தேதி வியாபாரிகள் சங்கம் சார்பில் கடைகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என வியாபாரிகள் சங்கம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 30, 2024

வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து

image

தாராபுரம் அருகே குண்டடம் பகுதியில் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் வைக்கோல் கட்டுகளை ஏற்றி சென்ற லாரியில் மின் கம்பி உரசிகதால் திடீரென தீ விபத்து இன்று ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் வைக்கோல் மற்றும் லாரி என பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமானது. இது குறித்து குண்டடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 30, 2024

திருப்பூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

image

திருப்பூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

News April 30, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் எஸ்பி ஆய்வு

image

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் உடுமலை மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த நிலையில் பொள்ளாச்சியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் இன்று கோவை
எஸ்பி பத்ரி நாராயணன் ஆய்வு செய்தார். உடன் தேர்தல் நடத்தும் அலுவலர் சர்மிளா, அதிகாரிகள், திமுக, அதிமுக, பாஜக கட்சியின் முகவர்கள் இருந்தனர்.

News April 30, 2024

திருப்பூரில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிக்கை வாயிலாக உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News April 29, 2024

மாவட்ட கல்வி அலுவலகத்தில் விசிக, பொதுமக்கள் புகார்

image

தாராபுரம் அருகே உள்ள டி.குமாரபாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். உண்மைக்கு புறம்பான காரணங்களை கூறி இரண்டு ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். எனவே பணியிடை நீக்கம் செய்த ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் எனக் கூறி இன்று மாவட்ட கல்வி அலுவலகத்தில் விசிக நிர்வாகிகள் மற்றும் டி.குமாரபாளையம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

News April 29, 2024

நீதித்துறையில் வேலை வாய்ப்பு

image

திருப்பூர் மாவட்ட நீதித்துறையில் 118 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

News April 29, 2024

உடுமலை விஏஓ தற்கொலை: மணியன் கைது

image

உடுமலை கணக்கம்பாளையம் விஏஓ-வாக பணியாற்றி கருப்புசாமியை தற்கொலைக்கு தூண்டிய மக்கள் மித்திரன் மணியன், கிராம உதவியாளர் சித்ரா ஆகியோரை மரணவாக்கு மூலம் கடிதம் அடிப்படையில் கோமங்கலம் காவல் துறையினர் தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தேனியில் கைது செய்யப்பட்டாா். பின்னர் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் மணியன் ஆஜர் படுத்தப்பட்டு நேற்று கோவை மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.

News April 29, 2024

திருப்பூர் ஆட்சியரகத்தில் இலவச நீர்மோர்

image

கோடை வெயிலின் தாக்கம் அதிகளவு இருந்துவரும் நிலையில், தமிழக அரசு பொது இடங்களில் பொதுமக்களுக்காக குடிநீர், ஓஆர்எஸ் பொடிகளை வழங்க உத்தரவிட்டது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு சேவைகளை பெற வரும் பொதுமக்களுக்கு உதவிகரமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீர் மோர் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

error: Content is protected !!