Tiruppur

News August 7, 2024

திருப்பூரிலிருந்து ரூ. 5 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்

image

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கம்பளி, பெட்ஷீட், ஆடைகள் என ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இணைந்தெழு தமிழ்நாடு அமைப்பு சார்பில் திருப்பூரில் இருந்து அனுப்பி இன்று வைக்கப்பட்டது.

News August 7, 2024

திருப்பூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News August 7, 2024

திருப்பூரில் தாய்ப்பால் வார விழா கொண்டாட்டம்

image

உலக தாய்ப்பால் வார விழா திருப்பூர் மாவட்டத்தில் 1 வாரம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் இன்று வழங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிறிஸ்துராஜ் வழங்கினார். மேலும், தாய்ப்பால் தானம் கொடுத்த தன்னார்வலர்களுக்கு சாண்றிதறழ்களும் வழங்கப்பட்டது.

News August 7, 2024

திருப்பூர்: நூலகங்களுக்கு புத்தகம் வழங்கும் விழா

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது நூலகத்துறை மற்றும் ஆறுமுகம் அறக்கட்டளை அனிதா டெக்ஸ்கார்ட் சார்பில் நூலகங்கள், பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் ஆட்சியர் கிறிஸ்துராஜ், அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி, புத்தக ஆசிரியர் பாலகிருஷ்ணன், மேயர் தினேஷ்குமார் மற்றும் கமிஷனர் பவன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

News August 7, 2024

நாளை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 

image

பொங்கலூர் சமுதாயக்கூடத்தில் காட்டூர், பொங்கலூர் ஆகிய ஊராட்சிகளுக்கும், வெள்ளகோவில் நாட்ராயன்கோவில் மண்டபத்தில் மேட்டுப்பாளையம் ஊராட்சிக்கும், கண்டியகவுண்டன்புதூர் ரமணா கல்யாண மண்டபத்தில் கண்ணமநாயக்கனூர், குரல்குட்டை ஆகிய ஊராட்சிகளுக்கும், அவிநாசி நடுவச்சேரி கே.டி.பி. கலையரங்கில் சின்னேரிபாளையம், வடுகபாளையம் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை நடக்கிறது என கலெக்டர் கூறினார்.

News August 7, 2024

திருப்பூரில் தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி

image

திருப்பூரில் ரோட்டரி கிளப் ஆப் செலிப்ரேஷன் சார்பில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. இதனை, மாநகராட்சி ஆணையர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பேரணியில் கலந்து கொண்ட 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் தாய்ப்பால் ஊட்டுவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

News August 7, 2024

கைத்தறி கண்காட்சி: கலெக்டர் தொடங்கிவைப்பு

image

கைத்தறி தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி கண்காட்சி நடைபெற்றது. இதனை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார். 
3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் நெசவாளர்கள் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் மற்றும் மிதியடிகள் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 20 சதவீத  தள்ளுபடியில் இந்த பொருட்கள் வழங்கப்பட இருக்கின்றன.

News August 7, 2024

ஆக.25: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அழைப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுகள் 53 வகையில் மாவட்ட மண்டலம் மற்றும் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் வருகின்ற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளன. https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News August 7, 2024

திருப்பூரில் தேசியக்கொடி தயாரிப்பு பணி தீவிரம்

image

ஆகஸ்ட் 15ஆம் நாள் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூரில் தேசியக்கொடி தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. திருப்பூர் புதூர் பிரிவு பகுதியில் மோகன் என்பவர் தனது இல்லத்தில் இருந்தவாறு தேசிய கொடிகளை உற்பத்தி செய்து வருகிறார். 10 இன்ச் முதல் 60 இன்ச் வரை தயாரிக்கப்படும் தேசியக்கொடிகள் 25 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

News August 7, 2024

திருப்பூரில் ஹெல்மெட் கட்டாயம்: கமிஷனர் உத்தரவு

image

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி நேற்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து திருப்பூரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் குறித்து காவலர்களிடையே கேட்டறிந்தார். தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். இதனை காவல்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!