India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினந்தோறும் 2000-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதில் 900 முதல் 1000 பேர் வரை உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெறுகின்றனர். இவர்களுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று நேரமும் சத்தான உணவு சமைக்கப்பட்ட வழங்கப்பட்ட வருகிறது. ஷேர் பண்ணுங்க!

திருப்பூர் மாவட்டம் பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று (ஆகஸ்ட் 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூலாங்கிணறு, அந்தியூர், சடையபாளையம், பாப்பனூத்து , தளி, கஞ்சம்பட்டி பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழக முழுவதும் 32 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில், திருப்பூர் வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த ராஜராஜன் திருப்பூர் மாநகர தலைமையிடத்து துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் திருச்சி மண்டலம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக இருந்த சுஜாதா திருப்பூர் வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிரிஸ்துராஜ் மற்றும் அனைத்து அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டியும், தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு கவிதை, கட்டுரை போட்டிகளும் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு தொகையை வழங்கினர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் 2023-2024-ம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு www.tntourismawards.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக வருகிற 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார். மேலும், விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

திருப்பூர் அரிசி கடை வீதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில், அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. பொள்ளாச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உறுப்பினர் அடையாள அட்டைகளை விநியோகிப்பது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வு மையம் செயல்பட்டுவருகிறது. தேர்வு தொடர்பாக வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன. குரூப் 2 (ஏ) நடத்திய தேர்வில் முதல்கட்ட தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள போட்டித்தேர்வு மையத்தில் படித்த 9 பெண்கள் உள்பட 13 பேர் குரூப் 2 தேர்வில் தேர்ச்சிபெற்று நேற்று பணியில் சேர்ந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவிற்குட்பட்ட கரையான்புதூர் பகுதியில் இன்று காலை மர்ம நபர்களால் துரத்திச் செல்லப்பட்ட வாலிபர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்குச் சென்ற டிஎஸ்பி விஜிகுமார் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி உயிரிழந்தவர் யார்? கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் ஊரக வளர்ச்சித்துறை திருப்பூர் உட்கோட்டம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்றிரவு சோதனை மேற்கொண்டனர். உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் அலுவலக அறைகளில் சோதனை மேற்கொண்ட அவர்கள் கணக்கில் வராத 1 லட்சத்து 2 ஆயிரத்து 300 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக உதவி செயற்பொறியாளர் தர்மலிங்கம், உதவி பொறியாளர் சிவராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.