India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூரில் நாளை 11ஆம் தேதி பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். நாளை நடைபெறும் இக்கூட்டத்தில், அண்ணாமலை லண்டன் செல்ல உள்ள நிலையில் அதன்பிறகு கட்சியை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, நாளை நடைபெறும் இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், சுதந்திர தினமான வருகிற 15ம் தேதி அன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்கள் தங்களது பகுதிகள் சார்ந்த கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 4715 மாணவர்களுக்கு வங்கிப்பற்று அட்டைகளை அமைச்சர் பெ.சாமிநாதன் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கினார். விழாவில் மாவட்ட கலெக்டர் விஜய் கார்த்திகேயன், திருப்பூர் தெற்கு சட்டபேரவை உறுப்பினர் மற்றும் மேயர் முன்னிலை வகித்தனர்.

திருப்பூர், தாராபுரம் டூ பொள்ளாச்சி சாலையில், காரில் சென்று கொண்டிருந்த போது கோவிந்தாபுரம் அருகே எதிர்பாராத விதமாக நடந்த சாலை விபத்து நடைபெற்றது. விபத்தில் சிக்கிய நபர்களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மீட்டு 108 அவசர ஊர்தியில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இலா.பத்மநாதன் உடன் இருந்தார்.

உடுமலையில் கோவை, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த சில வருடங்களுக்கு முன் ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியது. இந்நிலையில் பல வருடங்கள் ஆகியும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. எனவே பணிகளை விரைந்து முடித்து புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டை கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திருப்பூர், மடத்துக்குளம் தொகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் புதல்வன் திட்டம் குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று மாணவர்களிடம் எடுத்துரைத்தார். தொடர்ந்து உடுமலைப்பேட்டையில் குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (10-8-24) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெறுவதில் என்பது எந்த மாற்றமும் இல்லை என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி நிலம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பெயர் சேர்த்தல் பெயர் நீக்க முகவரி மற்றும் மொபைலில் மாற்றம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் ஆகிய ஸ்மார்ட் கார்டு ரேஷன் கார்டு சம்பந்தமான மனுக்கள் கொடுத்து பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி இன்று தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். இதில் மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்தவர். பள்ளி நிர்வாகம் பாடத்திட்டம் சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வில் மடத்துக்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் கலைவாணி பாலமுரளி உட்பட பள்ளி தலைமையாசிரியர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அரசு பள்ளியில் பயின்ற உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கக்கூடிய தமிழ் புதல்வன் திட்டத்தை கோவையில் தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவிற்கு உட்பட அவிநாசிபாளையம் பகுதியில் உள்ள கல்லூரியில் இத்திட்டத்தினை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.