India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர், பல்லடம் அருகே கடந்த வியாழக்கிழமை 5 பேர் கொண்ட கும்பல் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வினோத் கண்ணன் என்பவரை ஓட ஓட விரட்டி வெட்டி தலையை முழுவதுமாக சிதைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கொலையில் ஈடுபட்ட நித்திஷ்குமார் (22), காளீஸ்வரன்(25) மற்றும் அவர்களுக்கு தகவல் அளித்த பிரபுதேவா(32), சாமிநாதன்(52) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருப்பூரில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்த 5 பேர், வினோத் கண்ணன் என்பவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இக்கொலை திருப்பூர் மாவட்டத்தை நடுக்க வைத்தது. இதில் அவரது தலையை முழுவதுமாக சிதைத்த கும்பல், இடது கையையும் துண்டாக வெட்டியது. இதுகுறித்து போலீசாரின் விசாரணையில்( அடுத்த பக்கம் திருப்பவும்)

சிவகங்கையைச் சேர்ந்தவர் அக்னிராஜ். கடந்த 2021ஆம் ஆண்டு மைனர் மணி என்பவர் கொலை வழக்கில் ஒன்பதாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். பின், ஜாமீனில் வெளியே வந்த அக்னி ராஜை மைனர் மணி ஆதரவாளர்கள் வெட்டி கொலை செய்தனர். இதற்கு பழிவாங்க வேண்டும் என அக்னி ராஜின் நண்பர்கள் “அக்னி பிரதர்ஸ்” என்ற குழுவை தொடங்கி அக்னி ராஜ் வழக்கில் தொடர்புடைய பரமசிவம், ஆகாஸ், அழகு பாண்டி என 3 பேரை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில் தான் பல்லடத்தில் வினோத் கண்ணன், பொன்னையா ஆகிய 2 பேர் பணியாற்றி வருவதை அக்னி பிரதர்ஸ் குழுவினர் நோட்டமிட்டு வந்தனர். இதனையடுத்து நேற்று முன் தினம் 2 பேரை கொலை செய்ய திட்டமிட்டு சென்ற போது பொன்னையா தப்பிச் சென்றுள்ளார். வினோத் கண்ணன், இவர்களை பார்த்து தப்பிக்க முயன்று ஓடியுள்ளாார். அவரை துரத்திச் சென்ற 5 பேர் கொண்ட கும்பல் தலையை சிதைத்து கொடூரமாக கொலை செய்துள்ளது.

மைனர் மணி கொலை செய்யப்பட்ட போது, வினோத் கண்ணன் வெட்டு காயம் அடைந்தவர். வினோத் கண்ணனுக்கும் இக்கொலையில் தொடர்பு இருக்கும் என கருதி, அவரை அக்கும்பல் நேற்று முன்தினம் படுகொலை செய்துள்ளது. இப்படி கொலைகளை அரங்கேற்றி உள்ள இக்குழு அவற்றை சினிமா பாணியில் “பழிக்கு பழியாக நன்கு முடிந்து விட்டது” என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தை திரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் அறிவிப்பை மாலையில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி 15 வேலம்பாளையத்தில் ரூ.36.43 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். இதில் கிறிஸ்துராஜ், செல்வராஜ் எம்எல்ஏ, எம்.எல்.ஏ, தினேஷ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஆய்வின் போது கட்டிடங்களின் தரம் மற்றும் அமைப்புகளை ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருந்தாலும் திருப்பூர் மாநகர பகுதி மக்களுக்கு என்றுபொழுதுபோக்கு தளமாக பெரிதாக எதுவும் இல்லை. இந்நிலையில் மாநகர பகுதியிலுள்ள ஆண்டிப்பாளையம் ஏரியில் சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பாக ரூ.1 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நடைபெறுகிறது.இதில் படகு இல்லம், சிறுவர் பூங்கா, உணவகம், போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிராமங்களில் நிரந்தரமாக வசிக்கும் கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனளிகளுக்கு 3,200 செலவில் கொள்முதல் செய்யும் திறன் உள்ள பணியாளா்களுக்கு 50% மாணியத்தில் 40 கோழி குஞ்சுகள் வழங்கப்படும். கணவனை இழந்த ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழி குஞ்சு 50% மானியத்தில் வழங்கப்படுகின்றது. எனவே ஆர்வமுள்ள விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை அணுகலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் வேலம்பாளையத்தில் அரசு மருத்துவனை கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை நாளை காலை 11 மணிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆய்வு செய்ய இருக்கிறார். மருத்துவமனை கட்டுமான பணிகள் மற்றும் நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் போன்றவை சரியாக திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டு வருகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்கிறார்.
Sorry, no posts matched your criteria.