India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெறுகிறது. காலை 9.5 மணிக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தேசியக் கொடியேற்றுகிறார். தொடர்ந்து சமாதான புறாவை பறக்க விடும் அவர் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்குகிறார்.

திருப்பூர் காங்கேயம் சாலை டிமார்ட் அருகில் அமைந்துள்ள பொதிகை மஹாலில் நாளை சுதந்திர தினத்தன்று மாலை 5 மணிக்கு குரங்குபெடல் திரைப்படம் திரையிடல் மற்றும் திரை கலைஞர்களுக்கான பாராட்டு விழா நடைபெற உள்ளது. அனுமதி இலவசம் என்பதால் அனைவரும் இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த வினோத் கண்ணன் கடந்த 8ஆம் தேதி பல்லடம் கரையான் புதூர் பகுதியில் மர்மக்கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். போலீசார் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக பல்லடம் போலீசார் ஏற்கனவே 4 பேரை கைது செய்தனர். இந்நிலையில் தற்போது சுரேஷ், அஜய் தேவன் மற்றும் தங்கமணி ஆகியோரை கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் இணையதளங்களின் வாயிலாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை முன்பாகவே கண்டறிந்து விழிப்புணர்வுடன் இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், வங்கி அதிகாரி போன்று தொலைபேசியில் அழைத்து வங்கி கணக்கு விவரங்களை கேட்டால் ஒரு போதும் பகிரக்கூடாது என காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் மதுபானக்கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள், டாஸ்மாக் கடைகள் போன்றவை செயல்படக்கூடாது. இதனையும் மீறி டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூலம் மது பாட்டில்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூரில் பனியன் தையல் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் மகாசபை கூட்டம் லட்சுமி நகரில் நடந்தது. இதற்கு சங்க தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
இதில் வருகிற 19ம் தேதி முதல் 7 சதவீதம் கூலி உயர்வை அமல்படுத்தாத நிறுவனங்களில் டெலிவரி எடுப்பதையும், டெலிவரி கொடுப்பதையும் நிறுத்தி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்துவது பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

➤பல்லடத்தில் உள்ள வேலம்பாளையத்தில் உள்ள குழந்கைள் காப்பகத்தில் இருந்து சிறுவன் தப்பி ஓட்டம். ➤அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வந்ததால், ஆற்றோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ➤திருப்பூரில் வரும் 16ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. ➤திருப்பூரில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொடுவாய் மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட மின்நுகர்வோர் ஜூன் மாதம் செலுத்திய மின் கட்டணத்தை இம்மாதம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொடுவாய் பிரிவு அலுவலகத்தில் தவிர்க்க இயலாத காரணத்தால் ஆகஸ்ட் மாதம் மின் கணக்கீடு செய்ய இயலவில்லை. எனவே, கொடுவாய் பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட மின்நுகர்வோர், ஜூன் மாத கட்டணத்தை செலுத்தவும். கட்டணம் கூடுதல், குறைவோ இருந்தால் அக். மின் கட்டணத்தில் ஈடு செய்யப்படும்.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2023-24ம் கல்வியாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த அனைத்து மாணவ, மாணவிகளும் உயர்கல்விக்கு செல்வதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்லூரிக்கு விண்ணப்பிக்காத மற்றும் பெற்றோர் இல்லாத மாணவர்கள், கல்வி கட்டணம் செலுத்த இயலாத நிலையில் இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்புகள் நேற்று முதல் நடைபெறுகிறது.

உடுமலை வனச்சரக பகுதியில் உள்ள மலைவாழ் கிராமங்களில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்படி ஒவ்வொரு இந்திய குடிமகனும் அவரவர் வீட்டில் கொடி ஏற்ற வேண்டுமென தெரிவித்த நிலையில், தற்போது கொடி ஏற்றுவதற்கு உடுமலை வனச்சரகர் மணிகண்டன் அனுமதி மறுத்துள்ளார். இதனால் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்த முடியாத நிலை உள்ளதால் ஆளுநருக்கு பாஜக பழங்குடியின துணைத் தலைவர் நடராஜ் நேற்று
மனு அனுப்பியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.