India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசின் சார்பில் கடந்த 2023 செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இன்று முதல் மீண்டும் விடுபட்ட பெண்களுக்கு மனுக்கள் வழங்கப்படுவதாக தகவல் பரவியது. இதனை நம்பி ஏராளமான பெண்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஏற்கனவே மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ரூ.1,919 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை சற்றுமுன் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன்மூலம் திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு நனவாகியுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக 3 மாவட்டங்களில் 74 ஏரிகள், 971 குளம் குட்டைகள் என 1,045 நீர்நிலைகளை நிரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; 24,468 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் இளங்கலை அறிவியல் 3 வருட முழுநேர பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

திருப்பூர் மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொள்கிறார். இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் 24,450 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதி (பொள்ளாச்சி வட்டம்), பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து இன்று ஆய்வு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி கலந்து கொண்டார்.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தென்னிந்திய பொறுப்பாளர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜூலை மாதத்தில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூபாய் மதிப்பில் 13.8 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இது கடந்த வருட ஜூலை மாதத்தோடு ஒப்பிடும் பொழுது ரூபாய் மதிப்பில் சுமார் 1,400 கோடி உயர்ந்து. ஆக மொத்தம் ஜூலை மாத ஏற்றுமதி ரூ.10,677 கோடியாக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு நீதி கேட்டும் உயிரிழந்த மாணவி ஆத்மா சாந்தி அடைய வேண்டியும் திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் வடக்கு போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 123.5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.