India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துவராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, குடிநீர், சாலை வசதி, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 755 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாவட்டத்தின் பல பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. இந்த மழையின் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி திருப்பூர் மாவட்டத்தில் 126.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொங்கலூர் பகுதியில் திருச்செங்கோட்டிலிருந்து பொள்ளாச்சி நோக்கி கார் இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது காரானது எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரை ஓட்டிச் சென்ற சதீஸ் (42) உயிரிழந்தார். மேலும் லாரி சாலையில் கவிழ்ந்ததில் லாரி ஓட்டுநர் படுகாயமடைந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடுமலை, கோமங்கலம் புதூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஆக.20) காலை 9 முதல் மாலை 4 மணி வரை கோமங்கலம், கோமங்கலம்புதூர், சங்கம்பாளையம், பண்ணை கிணறு, கோழி குட்டை, முக்கூடல், ஜல்லிபட்டி, சீலக்காம்பட்டி, மலையாண்டிபட்டினம், கெடிமேடு, கூல நாயக்கன்பட்டி, லட்சுமபுரம், செட்டிபாளையம் தேவநல்லூர் ஆகிய பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்து உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 19) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாள்களாக மாவட்டத்தின் சில பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்துவருவது குறிப்பிடத்தக்கது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

➤திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டல பாசனத்திற்கு அமைச்சர் சாமிநாதன் தண்ணீரை திறந்து வைத்தார்.
➤பழையக்கோட்டை, ஒலப்பாளையம், காடையூர் பகுதிகளில் நாளை மின்தடை
➤பொள்ளாச்சி எம்.பி அலுவலகம் திறப்பு
➤விவசாய சங்க தலைவரான என் எஸ் பழனிச்சாமியின் மணிமண்டபத்தை திறந்து வைத்த எடப்பாடி பழனிசாமி
➤ஆறாவது மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிகளுக்கான திருப்பூர் தடகளத் திருவிழா இன்று தொடங்கியது.

திருப்பூர், உடுமலை கச்சேரி வீதியில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தை செய்தி துறை அமைச்சர் இன்று திறந்து வைத்தார். உடன் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம கிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் தடகள அசோசியேசன் சார்பாக ஆறாவது மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிகளுக்கான திருப்பூர் தடகளத் திருவிழா இன்று தொடங்கியது. இதனை திருப்பூர் தொகுதி எம்.பி சுப்பராயன், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி ஆக.22ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கட்சியின் கொடி தயாரிக்கும் பணி திருப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையை அடுத்த பனையூரில் கட்சிக் கொடியை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 94,121 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும் வகையில் 2-ம் மண்டல பாசனத்திற்கு இன்று முதல் வரும் டிசம்பர் 16ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு உரிய இடைவெளி விட்டு 4 சுற்றுகளில் 8000 மில்லியன் கன அடி நீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.