Tiruppur

News August 20, 2024

திருப்பூர் இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤பல்லடத்தில் பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு
➤ஆகஸ்ட் 23ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
➤நாளை உடுமலை எலையமுத்தூர் மேட்டுக்காடு எஸ்.ஆர்.எம் திருமண மண்டபத்தில் மற்றும் ஜி.கே. மஹாலில் மக்களுடன் முதல்வர் முகாம் நடக்கிறது.
➤திருப்பூர் மாவட்டத்தில் ஒண்டிவீரன் மற்றும் ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

News August 20, 2024

போக்சோ குற்றவாளிக்கு 40 ஆண்டு சிறை

image

மடத்துக்குளம் அடுத்த கொழுமம் கோவிலில் பூசாரியாக பணி செய்து வந்தவர் ஐயப்பன். கடந்த 2021 ஆம் வருடம் கோவிலுக்கு வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, உடுமலை மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.பின்பு வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மாவட்ட மகிலா நீதிமன்றம் ஐயப்பனுக்கு 40 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

News August 20, 2024

நாளை மக்களுடன் முதல்வர் முகாம்

image

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (21.8.24) உடுமலை எலையமுத்தூர் மேட்டுக்காடு எஸ்.ஆர்.எம் திருமண மண்டபத்தில் தும்பலபட்டி, கல்லாபுரம், எலையமுத்தூர் (ம) குருவப்பநாயக்கனூர் ஆகிய ஊராட்சிகளுக்கும், குடிமங்கலம் சோமவாரப்பட்டி ஜி.கே. மஹாலில் தொட்டம்பட்டி, இலுப்பநகரம், கொங்கல்நகரம், பண்ணைக்கிணறு, புதுப்பாளையம் ஊராட்சிகளுக்கும் மக்களுடன் முதல்வர் முகாம் நடக்கிறது என கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.

News August 20, 2024

கத்தி குத்து சம்பவம் 8 பேர் கைது

image

திருப்பூர், பல்லடத்தில் நேற்று இரவு தமிழ்ச்செல்வன், டைமண்ட் இளைஞர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இச்சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தற்செயலாக வாகனத்திற்கு வழிவிடுவது சம்மந்தமாக ஏற்பட்டது தான். மேலும், இது தொடர்பாக பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

News August 20, 2024

திருப்பூரில் வெளுத்து வாங்கிய மழை

image

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் திருப்பூர் வடக்கு பகுதியில் 55 மில்லி மீட்டரும், குமார் நகர் பகுதியில் 65, திருப்பூர் தெற்கு பகுதியில் 37, அவிநாசியில் 22, தாராபுரத்தில் 43, உப்பாறு அணை பகுதியில் 70 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகி இருப்பதாகவும், மாவட்டம் முழுவதும் 527.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 20, 2024

திருப்பூரில் அரசு வேலை: தேர்வானவர்கள் விவரம்

image

திருப்பூர் தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. திருப்பூர் தபால் துறையில் கிளை அஞ்சலக அலுவலர், கிளை உதவி அஞ்சலக அலுவலர், தபால்காரர் ஆகிய 153 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். <>தேர்வானவர்கள் விவரங்கள்<<>>

News August 20, 2024

BREAKING: பல்லடத்தில் பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பணப்பாளையம் பகுதி பாஜக கிளை பொறுப்பாளராக உள்ளவர் தமிழ்ச்செல்வன். நேற்று இரவு தனது நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தபோது எட்டு பேர் கொண்ட கும்பல் தமிழ்ச்செல்வனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி உள்ளனர். ஆபத்தான நிலையில் தமிழ்ச்செல்வன் சிகிச்சை பெற்று வரக்கூடிய நிலையில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 20, 2024

திருப்பூரில் இன்று மின்தடை

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை, கோமங்கலம் புதூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஆக.20) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். அதேபோல் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பல்லடம் நாரணாபுரம் துணைமின் நிலையம், ஊதியூர் மற்றும் ராசாத்தாவலசு துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 20, 2024

திருப்பூர் கலெக்டர் அழைப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 23ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக அறை எண் 240-ல் காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனுக்களை வழங்கலாம். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இதில் விவசாயிகள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் அழைப்பு கொடுத்துள்ளார்.

News August 19, 2024

திருப்பூர் இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤நாளை மின்தடை: கோமங்கலம், கோமங்கலம்புதூர், சங்கம்பாளையம், பண்ணை கிணறு, கோழி குட்டை, முக்கூடல், ஜல்லிபட்டி, சீலக்காம்பட்டி, மலையாண்டிபட்டினம், கெடிமேடு, கூல நாயக்கன்பட்டி, லட்சுமபுரம், செட்டிபாளையம், தேவநல்லூர்
➤திருப்பூரில் ரக்ஷா பந்தன் விழா கோலாகலம்
➤திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் கனமழை காரணமாக வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
➤திருமூர்த்தி அணை வேகமாக நிரம்புவதால் வெள்ள அபாய எச்சரிக்கை

error: Content is protected !!