India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூரைச் சேர்ந்த கவுதம் என்பவர், திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைப்பதற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் மத்திய – மாநில அரசுகள் இதுகுறித்து, மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. புதிய சாலை அமைத்தால், விலங்குகள் வேட்டையாடப்படவும், மரங்கள் வெட்டி கடத்தவும் வாய்புள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பெட்டிக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 11 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக அதிகாரிகள் 94440-42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர், காங்கேயம் அருகே சிவன்மலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மலைக்கோவில் உள்ளது. இதில் இன்று காலை திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் காங்கேயம் யூனியன் சேர்மேன் மகேஷ்குமார், சப் கலெக்டர் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சதீஸ், ஏபிஆர்ஓ மனோஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

உடுமலை-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பழனியைச் சேர்ந்த பிரவின், ஆதித்யா இருவரும் கல்லூரி முடிந்து நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பின. அப்போது எதிரே வந்த கார், இருசக்கர வாகனத்தில் மீது மோதியது. இதில் இருவர் பலத்த காயம் அடைந்தனர். இதற்கிடையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழந்தார். ஆதித்யா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மடத்துக்குளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை மூலம் காய்கறி விதைகளை நேரடியாக விற்பனை செய்கிறது. கீரை, தக்காளி, வெண்டை, கத்திரி, பொரியல் தட்டை போன்ற ஐந்து விதமான காய்கறி விதைகள் ரூபாய் 50/- என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தேவைப்படுவோர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளலாம்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சீர் மரபினர் நவீன ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் அமைக்க தேவையான நிதியில் மூன்று லட்சம் வரை மானியம் வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் திருப்பூர் மாவட்ட அலுவலகத்திற்கு வரவும் என மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கபட்டு உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சம்பவத்தை தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் முருகேசன் மாநகர துணை கமிஷனர் கிரிஷ் யாதவ் கலந்து கொண்ட பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சிக்குள் பட்டம் 45வது வார்டு கவுன்சிலராக பாத்திமா தஸ்லீன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவரை காணவில்லை என அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெறவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் நிதிக்கலகமாகும். திருப்பூர் மாவட்ட தொழில் முதலீட்டு கழகம் திருப்பூர் குமார் நகர் தீயணைப்பு நிலையம் அருகே உள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் கடந்த 19ஆம் தேதி முதல் அடுத்த மாதம் செப்டம்பர் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்தவராஜ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதோடு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. திருப்பூர் வடக்கு தாலுக்கா பகுதியில் 41 மில்லி மீட்டர் மழையும், கலெக்டர் அலுவலகப் பகுதியில் 30 மி.மீட்டர் மழையும், தெற்கு பகுதியில் 21 மில்லி மீட்டரும், பல்லடம் சாலையில் 38 மில்லி மீட்டரும், பல்லடத்தில் 6 மில்லி மீட்டர் என மாவட்டம் அல்லது 211.40 மி.மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.